பக்கம்:மதன கல்யாணி-3.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 111 ராஜாயி:- எனக்குச் சரியாக இருபதாகிறது. என் தம்பிக்குப் பதினெட்டாகிறது. ஜெமீந்தார்:- (முனனிலும் அதிக வியப்பும் திகைப்புமடைந்து) ஹா! அப்படியா! அந்த வழக்கில் உங்களை சைதாப்பேட்டைக்கு அனுப்பினதாகச் சொன்னாயே, அதுவரையில் நீங்கள் யாருடைய வீட்டில் இருந்தீர்கள்? ராஜாயி:- அந்த வக்கீல் வீட்டிலேயே இருந்ததாகத் தான் சொற்ப மாக நினைவுண்டாகிறது. ஜெமீந்தார்:- அவர் உங்களை அனுப்பிய போது உங்களுக்கு எவ்வளவு வயசிருககும். ராஜாயி:- எனக்கு ஒரு சுமார் ஆறு வயசிருக்கலாம். என் தம்பிக்கு நாலு வயசிருக்கலாம். ஜெமீந்தார்:- அவர் உங்களை அனுப்பினாரே என்ன காரணத் தினால் அனுப்பினாா என்பது இப்போது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ராஜாயி:- அப்போது நடந்த சங்கதி எல்லாம் எனக்குக் கனவு போல இருக்கிறது; இந்த சிவஞான முதலியார் அப்போது இந்த வீட்டில் இல்லை; வேறே ஒரு வீட்டில் இருந்தார். அந்த வீட்டில் இன்னொரு குடித்தனக்காரர் இருந்தார். அவரும் வக்கீல் வேலை செய்தவர் என்று தான் நான் சந்தேகிக்கிறேன். அவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஊரில் அப்போது வாந்திபேதி பிரமாத மாகப பரவி இருந்தது. திடீரென்று அந்த இரண்டு குழந்தைகளும் வாந்திபேதி கண்டு ஒரே நாளில் இறந்து போய்விட்டன. எங்களுக் கும் அந்த வியாதி உண்டாகிவிடும் என்று பயந்து சிவஞான முதலியாா அன்றைய தினமே எங்களை சைதாப்பேட்டைக்கு அனுப்பிவிட்டார். ஜெமீந்தார்:- ஒகோ! அப்படியா சங்கதி! நீங்கள் சைதாப்பேட் டையில் யாருடைய வீடடில் இருநதீர்கள்? ராஜாயி:- செங்குந்தர் வீதியில் அண்ணாமலை முதலியார் என்ற ஒருவருடைய வீட்டில் இருந்தோம். up.65.III–8