பக்கம்:மதன கல்யாணி-3.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 12 மதன கல்யாணி ஜெமீந்தார்:- அங்கே போன பிறகு நீங்கள் மறுபடியும் வக்கீலின் வீட்டுக்குத் திரும்பி வந்ததுண்டா? ராஜாயி:- வரவே இல்லை. அவருடைய வீடு இரண்டு கட்டுள்ள பந்தோபஸ்தான வீடு. அங்கே அவர் எங்களை வெளியிலே விடாமல் இரண்டாவது கட்டிலேயே வைத்துப் பூட்டிவைத்திருந் தார். எங்களுடைய தகப்பனுக்கு விரோதியான பங்காளிகள் சிலர் இருப்பதாகவும், நாங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால், அவர்கள் எங்களைத் தூக்கிக் கொண்டு போய்க் கொன்று போட்டு விடுவார்கள் என்றும் சொல்லி அவர் பயமுறுத்திக் கொண்டு வந்தார். ஒரு வாத்தியார் மாத்திரம் இரண்டாவது கட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருந்து எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போய்விடுவார். அப்போது அந்த அண்ணாமலை முதலி யாரும் கூடவே இருப்பார். வக்கீல் சிவஞான முதலியார் எப்போ தாவது வந்து எங்களைப் பார்த்து, "நீங்கள் நன்றாகப் படித்து சீக்கிரம் வேலைக்குப் போய்விட வேண்டும். நான் இனி அதிக காலம் பணங்கொடுத்து உங்களை சவரகூழிக்க முடியாது" எனறு சொல்லிவிட்டுப் போவார்; அதன் பிறகு எங்களுக்கு வயசு வந்த வுடனே எங்களை வேலையில் அமர்த்தி வைத்துவிடடு, "அநாதை யாக அகப்பட்ட உங்கள மேல் நான் இரக்கம் கொண்டு இத்தனை வருஷகாலம் காப்பாற்றிப் படிப்பும் சொல்லிக் கொடுத்து வேலை யிலும் வைத்துவிட்டேன். இனிமேல உங்களுடைய காரியங் களை எல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். அதன் பிறகு நான் அடையாற்றில் இருந்த படி இந்தத் துறையில் இறங்கினேன். என் தம்பி தேனாம்பேட்டை யில் இருந்து இரண்டு மூன்று நாளைக்கு முன் எங்களிடம் வந்து சேர்ந்தான்-என்றாள். அவளது வரலாற்றை எல்லாம் கேட்டு வந்த கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது மனம் கரைகடந்த ஆத்திரமும், வீராவேசமும கொண்டு பதறியது. அவரது தேகம் கட்டிலடங்காமல் துடித்தது. கோபத்தினாலோ துயரத்தினாலோ என்பது தெரியாதபடி அவரது பெண்கள் கோவைப் பழம் போலச் சிவந்து போயின. மீசைகள் படபடவெனத் துடித்தன. அவர் எழுந்து அந்த அறையில் அங்கு மிங்கும் உலாவினார்; அடிக்கடி நெடுமூச்செறிந்து கர்ச்சித்தார்;