பக்கம்:மதன கல்யாணி-3.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் | 13 அவரது விபரீதமான தோற்றத்தைக் கண்டு மதனகோபாலன் பெரிதும் அச்சமும் கலக்கமும் அடைந்து, அவர் அவ்வாறு சஞ்சலம் அடைய வேண்டிய காரணம் என்னவென்று சிந்தனை செய்யலானான். ராஜாயி அம்மாள், தான் பயந்து கொண்டு தனது வரலாறுகளை எல்லாம் வெளியிட்டு விட்டோமே என்றும், அவர் தங்களை எல்லாரையும் தண்டனைக்குக் கொண்டு போய் விடுவாரோ என்றும் அஞசி அவரது முகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். அவ்வாறு கால் நாழிகை நேரம் கழிந்தது. அப்போதும் ஜெமீந்தாரது கொதிப்பு அடங்கியதாகத் தோன்றவில்லை. அவர் ராஜாயியிடத்தில் நெருங்கி, "பெண்ணே உனக்கும் உன்னுடைய தம்பிக்கும் நேர்ந்த இந்தக் கதியைப் பற்றியும், நீங்கள் இப்படிப் பட்ட தகாத காரியங்களைச் செய்வதைப் பற்றியும், என் மனம் படுகிறபாட்டை அந்தக் கடவுள் தான் அறிய வேண்டும். நீங்கள் ஒரு கோடீசுவரனுடைய வயிற்றில் ஜனித்திருந்தும், உங்களுடைய தலையெழுத்து நீங்கள் இப்படித் திண்டாடித் தெருவில் நின்று கேவலம் இழிவான செய்கைகளைச் செய்து வயிறு வளர்க்கும்படி செய்ததே என்பதை நினைக்க நினைக்க என் மனம் பதறுகிறது, பெண்ணே! உங்களுடைய பிறப்பின் வரலாறெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்; நீங்கள இருவரும் ஒரு கோடீசுவரருக்குப் பிறந்த குழநதைகள். அவா சில காரணங்களினால் உங்களை இந்த வககீலின் போஷணையில வைத்துப் போனார். இந்த வக்கீல், நீங்கள் இருவரும் வாந்தி பேதியினால் இறந்து போய்விட்டீர்கள் என்று அவருக்குச் செய்தி அனுப்பிவிட்டு உங்கள் பொருட்டு அனுப்பப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாயையும் அபகரித்துக் கொண்டு, உங்களை ஏமாற்றி அநியாயமாக இப்படி பரதேசி ஆண்டிகளாக ஒட்டிவிட்டிருக்கிறான். அந்தப் படுபாவி மாத்திரம் இப்போது இங்கே இருப்பானானால், அவனை நான் குத்திக் கொன்று அவனுடைய குடல்களை மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பேன்! இருக்கட்டும்; அவன் எங்கே தப்பினான்; அவனுக்குச் சேர வேண்டிய மரியாதையை நான் எப்படியும் செய்தே தீருவேன்" என்று ஆத்திரத்தோடு கூற, அவரது கண்களில் இருந்து கண்ணிர் குபிரென்று பொங்கி வெளிப்பட்டது. அவர் ஒரு குழந்தை போல விம்மிவிம்மி அழுது தமது வஸ்திரத்தால் முகத்தை மூடிக் கொண்டார்.