பக்கம்:மதன கல்யாணி-3.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


114 மதன கல்யாணி அவர் சொன்ன எதிர்பாராத புதிய விஷயத்தைக் கேட்ட ராஜாயி அம்மாள் அளவிலடங்காத வியப்பும் திகைப்பும் ஆவலும் கொண் டவளாய்ச் சடக்கென்று எழுந்து உட்கார்ந்த வண்ணம் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, "ஐயா! தாங் கள் சொல்வதைக் கேட்க, இப்போது நான் கனவு காண்கிறேனோ, அல்லது, இந்த சம்பாஷணை உண்மையிலேயே நடக்கிறதோ என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாங்கள் கோடீசுவரரு டைய குழந்தைகள் என்பது உண்மைதானா? எங்களுடைய தாயும் தகப்பனும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இவ்வளவு தூரம் கெட்டுப் போன எங்களை அவர்கள் இனிமேல் சேர்த்துக் கொள்வார்களா? நாங்களும் தாய் தகப்பனைப் பார்க்கும்படியாக இனி இந்த ஜென்மத்தில் நேரப் போகிறதா?" என்று மிகவும் உருக்கமாகவும் ஆவலாகவும் கூறினாள். அதைக் கேட்ட ஜெமீந்தார், "குழந்தாய்! உங்களுடைய தாய் நீங்கள் குழந்தைகளாக இருக்கையிலேயே இறந்து போய் விட்டாள். உங்களுடைய தகப்பனார், உங்களுடைய தாயையும், உங்களையும் இழந்த துயரத்தைச் சகிக்கமாடடாமல் ஏக்கங் கொண்டு பித்தன் போலவும் நடைப்பிணம் போலவும் இருந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு சமஸ்தானத்தின் ஜெமீந்தார். அதோடு அவர் ஒரு பெருத்த வியாபாரமும் செய்து வருகிறார். அவரிடத்தில் இப்போது ரொக்கமாக மாத்திரம் இரண்டு கோடி ரூபாய் இருக்கிறது. இருந்தும் என்ன உபயோகம்? அவர் எல்லா வற்றையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டு வெகு சீக்கிரத்தில் சந்நியாசம வாங்கிக் கொள்ள எண்ணியிருக்கிறார். நீங்கள் செய்யும தொழிலை அவர் அறிந்தால், அவரது இருதயம் வெடித்துப் போய் விடும். இருந்தாலும், நீங்கள் இந்தத் தொழிலையே அடியோடு ஒழித்து நல்ல நடத்தை உடையவர்களாய் மாறிவிடுவதாக உறுதி சொல்ல வேண்டும். அதோடு, நீ, அந்த சுந்தரம் பிள்ளை, உன்னுடைய தம்பி, அவனுடைய புதிய சம்சாரம் ஆகிய மூவரும் உடனே இங்கே வரும்படி செய்யவேண்டும். அப்படி நீ நடந்து கொள்வாயானால், உன் தகப்பனார் இருக்குமிடத்தை நான் காட்டுவதோடு உங்களை எல்லாம் மன்னித்து அவர் ஏற்றுக் கொள்ளும்படி செய்கிறேன்" என்றார்.