பக்கம்:மதன கல்யாணி-3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 115 உடனே ராஜாயியம்மாளினது முகம் அளவிறந்த மகிழ்ச்சியி னால் இளகி ஜ்வலித்தது. அவர் எவ்விதம் நடந்து கொள்ளச் சொல்லுகிறாரோ அவ்வாறு தான் இனி நடந்து கொள்வதாக உறுதி கூறினாள். அந்தச் சமயத்தில், ஒரு வேலைக்காரன் ஓடிவந்து, மைலாப்பூரில் இருந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும் பல ஜெவான்களும் வநதிருப்பதாகவும, அவாகளைக் கூப்பிடுவதாகவும் தெரிவித்தான். அவர்கள் கொலை நடந்த இடத்தைப் பார்க்க வந்தார்களோ, அல்லது, மைனர் லஞ்சம் கொடுத்ததாகச் சொன்னதன் மேல் அந்த சார்ஜண்டைத் தேடிக் கொண்டு வந்தார்களோ என்ற சந்தேகமும் ஐயமும் ஜெமீந்தாரினது மனதில் எழுந்தன. அவர் உடனே அந்த ஆளை எச்சரித்து, சார்ஜண்டு துரையின் குதிரையைப் போலீசார் காணாமல் மறைத்து விடும்படியும், சார்ஜண்டு அங்கே வர வில்லை என்று எல்லோரும் சொல்லும்படி எச்சரித்து வைக்கும் படியும் சொல்லியனுப்பிவிட்டு, அந்த உடைகளை எல்லாம் ஓர் இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, மோகனாங்கியை அழைத்து ராஜாயியை ரகசியமான ஓரிடத்தில் மறைத்து வைக்கும் படியும் அவளுக்கு சேலை முதலிய உடைகள் அணிவிக்கும் படியும் ஏற்பாடு செய்துவிட்டு, மதனகோபாலனை அழைத்துக் கொண்டு, பங்களாவிற்கு வெளியே ராஜபாட்டையில் இருந்த போலீசாரை நோக்கிச் சென்றாா. ★ 大 ★ 32-வது அதிகாரம் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது ைெமனரும் பாலாம்பாளும் சேர்ந்து கருப்பாயியை நன்றாக அடித்துக் கைகால்களை எல்லாம் கட்டித் தென்னஞ் சோலையின் பின்புற வாசலின் வழியாகத் துக்கிக் கொணர்ந்து சமுத்திரத்தில் போட்டு விட்டு, அவள் அன்றோடு இறந்து போய் விடுவாள் என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, உள்ளே போய்விட்டார்கள் அல்லவா? அதன் பிறகு மறுநாள் மாலையில் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரினது பங்களாவிற்குள் படுத்துத் தனது வரலாற்றைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/119&oldid=853248" இலிருந்து மீள்விக்கப்பட்டது