பக்கம்:மதன கல்யாணி-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 117 பலவாறு யூகித்து பாலாம்பாள், உடனே மைனரிடத்தில் அந்தச் சங்கதியைச் சொல்ல, தாங்கள் கருப்பாயியை எப்படியும் கொன்று விடவேண்டும் என்று அவர்கள் தீாமானித்துக்கொண்டு தென்னஞ் சோலைக்குள்ளே சென்று அவளைப் பிடித்து முன்னே விவரிக்கப் படடபடி அடித்துச் சித்திரவதை செய்தனர். அந்த அடிதடிச் சண்டையின் கடைசியில், கருப்பாயி மைனரைப் பார்த்து, "நீ என்னுடைய பிள்ளை" என்று சொன்னதை அவர்கள் இருவரும் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. ஏனெனில், நானே உண்மையான மைனரென்று அவன் உறுதியாக எண்ணி இருந்ததன்றி, குழந்தைப் பருவத்திலிருந்து எல்லோராலும் அப்படியே மதிக்கப்பட்டு வந்ததால், அதைப் பற்றி அவர்கள் சந்தேகிக்க ஏதுவில்லாதிருந்தது. கருப்பாயி அடியைப் பொறுக்க மாட்டாமல், அவ்வாறு பிதற்றித் தங்களைத் தாறுமாறாகத் தூற்றுகி றாள் என்றும், அவளது சொற்களுக்கு அர்த்தமே இல்லை என்றும் அவர்கள் இருவரும் நினைத்திருந்தனர். அன்றிரவு முழுதும் அவர்கள் ஒருவாறு மகிழ்ச்சி அடைந்தவர்களாகப் படுத்திருந்தனர் ஆனாலும், கருப்பாயிக்குப் பரிந்து கொண்டு கட்டையன் குறவன் வந்து தங்களைக் கொன்று போட்டுவிடுவானோ என்ற அச்சம் மாத்திரம் அப்போதைக் கப்போது மைனரது மனதில் தோன்றிக் கொணடிருநதது. ஆனால், அவளது பிணம் சமுத்திரத்தின் அலைகளினால் உருட்டபபட்டு மீன்களுககு இரையானாலும் ஆகலாம், அல்லது, நெடுந்துரத்திற் கப்பால் ஒதுக்கப்பட்டாலும் படலாம் ஆதலால், அவளைத் தாங்கள்தான் கொன்றோம் என்பது வெளியாக வகையில்லை என்றும், ஆகையால் கட்டையன் குறவன் தங்களிடததில் கோபங்கொண்டு பழிவாங்க நினைக்க மாட்டான் என்றும் பாலாம்பாள் யோசனை சொன்னாள். அவ்வாறு அவர்கள இருவரும் அன்றைய இரவைப் போக்கினர். மறுநாளைய காலையில், வேலைக்காரர்களின் மூலமாக ஒரு புதிய செய்தி அவர்களுக்கு எட்டியது. கைகால்கள் கட்டப்பட்டு சமுத்திரத்தில் கிடந்த ஒரு கிழவியை முதல் நாளைய சாயுங்காலம் ஒருவர் கண்டெடுத்து பக்கத்திலுள்ள மனோகர விலாஸ்த்தில் கொண்டு வந்து போட்டிருப்பதாகவும், அவள் பிழைத்துக் கொண்டதாகவும், இன்னமும் ஸ்மரணை சரியாகத் திரும்பாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/121&oldid=853251" இலிருந்து மீள்விக்கப்பட்டது