பக்கம்:மதன கல்யாணி-3.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


120 மதன கல்யாணி ஒப்புக்கொள்ளப் படலாம் என்பதும் சட்டமாதலால், அவ்வாறு அழைக்கப்பட்ட மாஜிஸ்டிரேட்டு உடனே தமது மோட்டார் வண்டியில் ஏறி அதிக விசையாக வண்டியை ஒட்டிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். அதற்குள் டாக்டர் கருப்பாயிககுத் தேவையான சிகிச்சைகளைச் செய்து, அவளைப் பிழைக்கவைப்ப தற்குத் தமமாலேன்ற முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்துக் கொண்டிருந்தார்; அப்போது கருப்பாயி சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தாள் ஆனாலும் தனக்கு அந்தியகாலம நெருங்கி விட்டதாகையால் தான் சொல்வதை எல்லாம் உடனே எழுதிக் கொள்ளும்படி அவள் வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த மாஜிஸ்டிரேட்டு, தம்மோடு டாக்டர், சப் இன்ஸ்பெக் டர் ஆகிய இருவரை மாத்திரம் வைத்துக் கொண்டு அவளது வாக்கு மூலத்தை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டார். அந்த வாக்குமூலம் முடிவதற்குள் கருப்பாயி பன்முறை களைத்துக் கண்மூடி வீழ்ந்து வீழ்ந்து விழித்துக் கொண்டு பேசிக் கொண்டே போகக் கடைசியில் அவளது சுவாசம் வாயால் வரத்தொடங்கியது. அதன் பிறகு பத்து நிமிஷ நேரத்தில் அவளது பிராணன் போய் விட்டது. அவள் கொடுத்த வாக்குமூலத்தில் அபூர்வமான சங்கதிகளும் ஆச்சரியகரமான ரகசியங்களும் அடங்கியிருந்தமையால், அதன் விவரங்களை எல்லாம் விசாரணை காலம் வரையில் வெளியிடக் கூடாதென மாஜிஸ்டிரேட்டும் மற்றவரும் தீர்மானித்துக் கொண்டனர். அநத வாக்குமூலத்தில் டாக்டர் சப் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரது கையெழுத்துகளும் வாங்கப்பட்டதன்றி, அது ஒரு கெட்டியான காகித உறைக்குள் வைத்து அரக்கு முத்திரை வைக்கப பெற்றது. அதன் பிறகு மாஜிஸ்டிரேட்டும் சப் இன்ஸ் பெக்டரும் அவ்விடத்தை விட்டுப் போயினர். டாக்டர் உடனே அந்தப் பிணத்தைக் கொளுத்திவிடும்படி அனுப்பிவிட்டார். கருபபாயி வாக்குமூலம் கொடுத்த போதே அதை சப் இன்ஸ் பெக்டரும் தமது கைக்குறிப்புப் புஸ்தகத்தில் எழுதிக் கொண்டிருந் தார் ஆதலால், அதில் குறிக்கப்பட்ட விஷயங்களைப் பற்றித் தாம் விசாரணை செய்து சாட்சியங்களைச் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நேராக மனோகர விலாசத்திற்குச் சென்றார்.