பக்கம்:மதன கல்யாணி-3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 125 செல்வாக்கும் உடையவர் ஆதலால், ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையில் நான்கு மாத காலத்திற்குள், அவர்களது மனிதர்கள் பலவகையில் முயன்று, சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் ஆகையால், நீதித் தவறு ஏற்படடுவிடும என்பது முதலாவது காரணம். அந்த வழக்கைப் பிரதமத்தில் விசாரிக்க வேண்டிய மாஜிஸ்டிரேட்டு, இறந்து போனவளிடத்தில் மரணாந்த காலத்தில் வாக்குமூலம் வாங்கி இருப்பது பற்றி அவரே அந்த வழக்கில் ஒரு சாட்சியாக வரவேண்டியிருந்ததால், அந்த வழக்கை ஜட்ஜியே விசாரிப்பது மாஜிஸ்டிரேட்டின் கண்ணிய பதவிக்கு ஏற்றதாக இருக்கும் என்பது இரண்டாவது காரணம், மாரமங்கலம் சமஸ் தானத்தின் உண்மையான ஜெமீந்தார் தம்முடைய சொத்துகளையும உரிமைகளையும் அனுபவிக்க முடியாமல் அநியாயமாக விலக்கி வைக்கப்பட்டு வருவதால், அவரை இன்னமும் அநாவசியமாக விலக்கிவைப்பது அநீதி என்பது மூன்றாவது காரணம். இன்னமும் இவை போன்ற பல காரணங்களையும் சர்க்கார் வக்கீல் எடுத்துக் காட்டி எழுதி நேரில் கொடுத்த மனுவை ஜட்ஜி துரை ஒப்புக் கொண்டு அவ்வாறே மாஜிஸ்டிரேட்டுக்கு உத்தரவும் சாட்சிகளுக்கு சம்மன்களும பிறப்பிக்குமபடி ஆக்ஞாபித்து விட்டார். போலீசாா அந்த வழக்கின் விஷயத்தில் மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் உடையவர்களாய்ப் பெரும்பாடு பட்டதன்றி, அதன் விசாரணை தினத்தை ஒரு கலியான தினத்தை எதிர்பார்ப்பது போல மிகவும் ஆவலோடும் மகிழ்ச்சியோடும் எதிர்பார்த்திருந் தனர். ஆனால் குற்றவாளிகளுக்கும மைனரைச் சேர்ந்த மனிதர் களுக்கும அது ஒரு பெருத்த இழவு வீழ்ந்தது போல இருந்ததன்றி, அவர்கள் அந்த விசாரணை தினத்தை ஒரு கருமாந்தர தினம் போல மிகுந்த கவலையோடும் அசசத்தோடும் விசனத்தோடும் எதிர்பார்த் திருநதனர். கடைசியாக அந்த விசாரணை தினம் வந்து சேர்ந்தது. சென்னை ஹைகோர்டடு ஜட்ஜியின கச்சேரியில் அன்றைய தினம் ஒரு சுமாா பதினாயிரம் ஜனங்கள் கூடித் தேனடையில் ஈக்கள், மொய்ப்பது போல அடர்ந்து நெருங்கிவிட்டனர். சர்க்கார் வக்கீல், மைலாப்பூர் சப் இனஸ்பெக்டர் முதலிய ஏராளமான போலீஸ் உத்தியோகஸ் தர்கள் வந்து ஒரு பக்கத்தில் நிறைந்திருந்தனர். இன்னொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/129&oldid=853259" இலிருந்து மீள்விக்கப்பட்டது