பக்கம்:மதன கல்யாணி-3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 127 சர்க்கார் வக்கீல்:- (புன்னகையாகச் சிரித்துக் கொண்டு) வேஷம் என்றால் வஸ்திரமல்ல. அப்படிப்பட்ட தப்பிதத்துக்கு நான் பாத்திர னாவேனா? கோர்ட்டார் மன்னித்துக் கொள்ள வேண்டும். இவருடைய வேஷம் என்பதற்கு என்ன அர்த்தமென்பது சாட்சி களின் வாக்குமூலத்தால் வெகு சீக்கிரத்தில் விளங்கிப் போகும் ஆதலால் அதைப்பற்றி நான் அதிக விளக்கமாகப் பேசி கோர்ட்டா ருடைய காலத்தை வீணாக்க இஷடமில்லை. இரண்டாவது குற்றவாளி இதுவரையில் நாடகத்தில் வேஷதாரியாக இருந்து இப்போது சொற்ப காலமாக ஒரு புதிய வேஷத்தோடு இந்த யெளவனப் புருஷருக்கு தருமபத்தினியாக இருந்துவரும் ஒரு தாசி யம்மாள். பாரிஸ்டர் குரோட்டன் துரை:- (கனைத்துக் கொண்டெழுந்து) நமது நண்பரான சர்ககார் வக்கீல் இப்படிப் பேசுவதை நாங்கள் முற்றிலும் ஆடசேபிக்கிறோம். மைனர் நிரம்பவும் கண்ணியமான பெரிய மனிதர். சாட்சிகளின் விசாரணை நடக்குமுன், அவரைப் பற்றி இழிவாகப் பேசி, கோர்ட்டாருடைய மனதில் கெட்ட அபிப்பி ராயம் ஏற்படும்படி செய்வது சட்ட விரோதம். கோர்ட்டார் அதற்கு இடங் கொடுக்கக்கூடாது. சர்க்கார் வக்கீல்:- உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாடென்பது போல இருக்கிறது நமது நண்பர் சொல்வது; நான் சொல்வதெல்லாம் சாட்சிகளால் ருஜூவாகப் போகும் உண்மையான சங்கதிகளே தவிர, பொய்யான அவ தூறல்ல. சாட்சிகளால் வெளியாகப் போகும் சங்கதிகளின் சாராம் சத்தை நான் முன்னால் சொல்லுகிறேன். அதை எடுத்துச் சொல்லாமல் நான் சும்மா இருந்தால், எனக்கு இவ்விடத்தில் என்ன ஜோலி இருக்கிறது! எதிர்க்கட்சியின் பாரிஸ்டரான நமது நண்பருடைய வேலையும் இலகுவாகிவிடும். குற்றவாளிகளை அவர் விடுவித்துக் கொண்டு போவதும் சுலபமாகிவிடும். ஜட்ஜி: - சரி; சனடை வேண்டாம். சங்கதியை மேலே சொல்லலாம். சர்க்கார் வக்கீல்:- (கிலேகத்தோடு) நான் சண்டை போடவில்லை. எதிர்க்கட்சியின் பாரிஸ்டருடைய ஆட்சேபனைக்கு சமாதானம் 10.65.III-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/131&oldid=853262" இலிருந்து மீள்விக்கப்பட்டது