பக்கம்:மதன கல்யாணி-3.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 129 மைனர் ஒரு வேஷதாரி என்பதைத் தாம் ருஜூப்படுத்தப் போவதாக சர்க்கார் வக்கீல் சொன்னதைக் கேட்க, அதுகாறும் கருப்பாயினது வார்த்தையைப் பெருட்படுத்தாமல் இருந்த மைனரும், பாலாம்பாளும் கலக்கமும் அச்சமும் கொள்ளலாயினர். அதுகாறும் அந்த விஷயத்தைப் பற்றி சொற்பமும் சந்தேகங் கொள்ளாதிருந்த சிவஞான முதலியாரும் அவரது பக்கத்து பாரிஸ் டர்களும் திகைப்பும் கவலையும் கொள்ளலாயினர்; அந்தச் சமயத்தில் மதனகோபாலன் அழைக்கப்பட்டு, விசாரணைக் கூண்டின் மேல் நிறுத்தப்பட்டான். அவனது அற்புதமான அழகையும், கம்பீரமும வசீகரமும் நிறைந்த தோற்றத்தையும் கண்ட ஜட்ஜியும் மற்ற எல்லோரும் ஒருவித வியப்பும் சந்தோஷ மும் கொண்டவர்களாய், அவன் யாரோ ஒரு மகாராஜனது புத்திரனாக இருக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் அடைந்தனர். விசாரணை குமாஸ்தா அவனிடத்தில் பிரமாணம் வாங்க, உடனே சர்க்காா வக்கீல் அவனது வாயமூலமாக அடியில் வரும் விஷயங் களைக் கிரகித்தார்:- என் பெயர் மதனகோபாலன். என்னுடைய தகப்பனார் யார் என்பது எனக்குத் தெரியாது. எனக்குச் சுமார் இருபது வயசிருக்கலாம். நான் இன்ன வருஷம் பிறந்தேன் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. மைசூரிலிருந்து சந்தனக்கட்டை வர்த்தகம் செய்து வரும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், சிறு பிராயத்தி லிருந்து என்னையும் என் தங்கையையும் ஒருவரிடத்திலிருந்து வாங்கி அபிமான புத்திரன் புத்திரியாக மதித்து வளர்த்து வருகிறார். அவர் தம்முடைய சம்சாரத்தையும இழந்து அநாதையாக இருந்தமையால், எங்களை வாங்கி வளர்த்து வருகிறார். அவர் இப்போது இந்த ஊரில் மைலாப்பூர் கடற்கரையின் மேலிருக்கும் மோகன விலாஸம் என்ற பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி அதில் இருந்து வருகிறார். நானும் என்னுடைய தங்கையும் அவர் களோடு கூடவே இருந்து வருகிறோம். சென்ற சில தினங்களாக எனக்கு உடம்பு அசெளக்கியமாக இருந்தமையால், நான் படுத்த படுக்கையாக இருந்து பலவீனமான நிலைமையில் இருந்தேன். இன்றைக்கு நான்காவது நாள சாயுங்காலம், கிருஷ்ணாபுரம் ஜெமீந் தார் வெளியே போய் கொஞ்ச தூரம் உலாவிவிட்டு வரும்படியாக அனுமதி கொடுத்து என்னை அனுப்பினார். நான் ராஜபாட்டை