பக்கம்:மதன கல்யாணி-3.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 மதன கல்யாணி வழியாகவே சுமார் அரைமயில் தூரம் நடந்தேன். அதற்குள் அஸ்தமன சமயமாகிவிட்டது. இருள் சூழத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் நான் திரும்பிக் கடலின் அலையோரமாகவே வந்து கொண்டிருந்தேன். இந்த மைனரும் பாலாம்பாளும் குடியிருக்கும் சாயுஜ்ய நிலையம் என்ற பங்களாவின் பின்புறச் சுவரும், அதன் பக்கத்திலிருந்த தென்னஞ் சோலையின் மதிலும் அலை ஒரமாக இருந்தன. என்னுடைய காலில் ஒரு காயம் கட்டப் பட்டிருந்தமை யால், அதில் அலை மோதாமலிருக்க வேண்டும் என்ற நினை வினால் நான் சுவரோரமாக நடந்து வந்து கொண்டிருக்கையில, தென்னஞ் சோலைக்குள்ளிருந்து ஒரு பெருத்த கூக்குரல் கேட்டது. இதோ இருக்கும் குற்றவாளிகள் இருவரும், கொலை செய்யப் படட கிழவியை அடித்து வதைத்துக் கொண்டிருந்தார். அடிக்க வேண்டாம் என்று அவள் எவ்வளவு தூரம் கெஞ்சி மன்றாடியும் உபயோகமில்லாமல் போயிற்று. அந்தக் கிழவி இவர்களுடைய பங்களாவில் இருந்து முதல் நாள் ஏதோ ஒரு பத்திரத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டதாகவும், மறுநாள் அந்தத் தென்னந் தோப்புக்குள் அவள் வந்து ஒளிந்து கொண்டிருந்ததாகவும் பாலாம்பாள் சொல்லிச் சொல்லி மேன்மேலும் அவளை அடிக்க, மைனரும் அவளுக்குப் பரிந்து வந்து கிழவியைக் காலால் எடடி எட்டி உதைப்பதாகத் தெரிந்தது. அந்த அடிகளைப் பொறுக்க மாட்டாமல் அவள் பெருத்த கூக்குரல் செய்து, இந்த மைனர் தன்னுடைய மகன் என்றும், தானே இவரை ஜெமீந்தார் ஆக்கிய தாகவும் சொல்லி கிழவி திட்ட ஆரம்பித்தாள். உடனே இவர்கள் இருவரும் முன்னிலும் அடிக்க, அவள் உடனே கீழே வீழ்ந்து விட்டதாகத் தெரிந்தது. அவள் இறந்து போய்விட்டாள் என்றும், அவளுடைய பிணத்தை என்ன செய்வதென்றும் இவர்கள் பேசிக் கொண்டனர். பாலாம்பாள் அதை பூமிக்குள் புதைத்து விடலாம் என்றாள். அப்படிச் செய்தால், யாராவது கண்டு கொள்வார்கள் என்றும், ஆகையால் அவளுடைய கைகால்களை எல்லாம் கட்டிச் சமுத்திரத்தில் போட்டுவிட வேண்டும் என்றும் மைனர் சொன்னார். பாலாம்பாள் ஒடிப் போய்க் கயிறு கொண்டு வந்ததாகத் தெரிந்தது. உடனே இவர்கள் அவளுடைய கைகால்களை எல்லாம் கட்டித் தூக்கிக் கொண்டு அந்த மதில் சுவரிலிருந்த ஒரு வாசற் கதவைத்