பக்கம்:மதன கல்யாணி-3.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 மதன கல்யாணி கொண்டிருந்த மதனகோபாலனை நோக்கி, "ஐயா! நான் இப்போது உம்மை அதிகமாகத் தொந்தரவு செய்ய போகிறதில்லை. சில்லரை யாக இரண்டொரு கேள்விகளைக் கேட்டு நிறுத்திக் கொள்ளுகி றேன். நான் கேட்பதற்கு உண்டு, அல்லது, இல்லை என்று சுருக்கமாகப் பதில் சொல்லும்" என்றார். பா. குரோட்டன்:- இதுவரையில் நீர் என்ன தொழில் செய்து வந்தீர்? மதன:- (சிறிது தயங்கி) நான் அநேக பங்களாக்கில் வீணை கற்றுக் கொடுத்து வந்தேன். பா. குரோட்டன்:- பெருத்த ஜெமீந்தார்களுக்குப் புத்திரிகளா கவோ, அல்லது, அபிமான புத்திரர்களாகவோ இருப்பவர்கள் இப்படிப்பட்ட மேளக்காரத் தொழில் செய்வதை நீர் பார்த்திருக் கிறீரா? மதன:- நான் பார்த்ததில்லை. பா. குரோட்டன்:- நல்லது; நீர் இருக்கும் மனோகர விலாஸ் பங்களாவை விலைக்கு வாங்கி அதிலிருந்து வருகிறவர் கிருஷ்ணா புரம் ஜெமீந்தாரா, அல்லது, அவருடைய கூட்டாளியான பசவண்ண செட்டியாரா? மதன:- இருவரும். பா. குரோட்டன்:- (சிறிது குழம்பிப் போய்) சரி; அதிருக்கட்டும். நீர் நாலைந்து தினங்களாக அசெளக்கியமாக இருப்பதாகவும், காலில் ஏதோ புண் கட்டப்பட்டிருந்ததாகவும் சொன்னரே, அந்தப் புண் எப்படி உண்டாயிற்று? மதன:- ஒரு நாள் ராத்திரி நான் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பங்களாவில் எனக்கு அறிமுகமான ஒரு மனிதரைப் பார்க்கப் போனேன். அப்போது எங்கும் இருளாக இருந்தது. அந்த பங்களா வின் சொந்தக்காரரும் போலீசாரும் என்னைக் கண்டு திருடன் என்று சந்தேகப்பட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டார்கள். அதனால், காயம் உண்டாயிற்று; உடம்புக்கு அசெளக்கியமும் ஏற்பட்டது. பா. குரோட்டன்:- ஒகோ அப்படியா! அவர்கள் சுடும் போது அந்தப் பங்களாவின் ஒரு பக்கத்தில் நீர் இருந்தீர்?