பக்கம்:மதன கல்யாணி-3.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 135 மதன:- பங்களாவின ஒரு பக்கத்தில் தோப்பிருக்கிறது. அந்தத் தோப்புக்குள் நான் இருந்த போது சுட்டார்கள். பா. குரோட்டன்:- அதன் சொந்தக்காரரும் சேர்ந்து சுட்டதாகச் சொன்னரே அப்படியானால், அவருக்குத் தெரியாமல் தானே நீர் அந்தத் தோப்புக்குள் போனி? மதன:- ஆம். பா. குரோட்டன்:- நல்லது; அப்படியானால் நீர் எந்த வழியாகத் தோப்புக்குள் போனி? மதன:- வேலியில் ஒருவழி இருக்கிறது. அதன் வழியாகப் போனேன். பா. குரோட்டன்:- அவ்வளவு இருளில் திருட்டு வழியாகப் போனிரே; அங்கே நீர் சந்தித்ததாகச் சொல்லும் மனிதர் ஆண் பிள்ளையா, அல்லது, பெண்பிள்ளையா? மதன:- பெண்பிளளை. பா. குரோட்டன்:- அவருக்கு வயசு எவ்வளவிருக்கும்? மதன:- பதினைந்து. அல்லது பதினாறு இருக்கும். பா. குரோட்டன்:- பங்களாவின் சொந்தக்காரருக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன உறவுமுறை? மதன:- தங்கை. பா. குரோட்டன்:- சரி; நல்லது. அதிருக்கட்டும்; அந்த பங்களா எந்த ஜெமீந்தாருடைய பங்களா? மதன. அதை மாத்திரம் நான் சொல்ல முடியாது? பர். குரோட்டன்:- அது கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருடைய பங்களா அல்லவா? மதன:- கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருடைய பங்களாவென்று உங்களுக்கு யார் சொன்னது? பா. குரோட்டன்:- நான் கேட்பதற்கு நீர் பதில் வேண்டுமேயன்றி நீர் கேட்பதற்கு நான பதில் சொல்வதற்காக வரவில்லை. நான்