பக்கம்:மதன கல்யாணி-3.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 மதன கல்யாணி இருந்த தொகை மிகவும் சொற்பமே. அது அநேகமாகக் குழந்தை களுக்கே செலவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கும் எனக்கும் இருந்த சிநேகத்துக்கும், அவருக்கும் அவருடைய குடும்பத்தார் களுக்கும் வந்த பெருத்த விபத்துகளில் நான் பட்ட பாடுகளுக்கும், அவர் இந்த அற்பத் தொகை விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பாக இருப்பது தான் எனக்குச் சகிக்க முடியாததாக இருக்கிறது. செட்டியார்:- மெய்தான் மெய்தான். தாங்கள் அவருடைய விஷயத்தில் நிரம்பவும் பாடுபட்டிருக்கிறீர்கள் என்று அவரும் நன்றியறிதலோடு அடிக்கடி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அதனாலே தான் குழந்தைகள் இறந்து போய் சுமார் 15-வருவடி காலமாக அவர் பணத்தைப் பற்றிக் கண்டிப்பாகக் கேளாதிருந்தது. இதில் இன்னொரு விஷயமிருக்கிறது. இந்த ஐந்து லட்சம் ரூபாயை அனுப்பும்படி தாங்கள் அவருக்குக் கடிதம் எழுதினர்கள் அல்லவா. அந்த கடிதத்தை அவர் இன்னமும் வைத்திருக்கிறார். அதை நானும் பார்த்தேன். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? அதற்கு முன் தங்கள் வசத்திலிருந்த அவருடைய பனங்களெல்லாம் டாக்டர்களுக்காகக் கொடுக்கப்பட்டுப் போய் விட்டன என்றும், அப்போது வேறே எவ்விதமான கடனும் இல்லை என்றும், அதற்கு மேல், குழந்தைகளின் போஷணைக்காக மாத்திரம் பணம் தேவை என்றும் தாங்கள் எழுதியிருக்கிறீர்கள்; அதனாலே தான், அவர் ஐந்து லட்சத்தில் மிகுதி இருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுவது; இரண்டு சிறிய குழந்தைகளுடைய அறுமாசகால போஜனைக்கு ஐந்து லட்சம் ரூபாய் பிடிக்குமா? மகாராஜாவின் வீட்டுக் குழந்தையாக இருந்தாலும், அவ்வளவு பெருத்த தொகையை எப்படித்தான் செலவழிக்க முடியும்! குழந்தைகளோ திடீரென்று வாந்திபேதியால் இறந்து போய் விட்டார்கள்; கொஞ்சகாலம் வியாதியாகப் படுத்திருந்து இறந்து போயிருந்தார்கள் என்றால், அதன் பொருட்டாவது பணச் செலவு பிடித்திருக்கு மென்னலாம். வக்கீல்:- (கலக்கமும் கவலையும் அடைந்து) ஒகோ! அப்போது நான் எழுதின கடிதத்தில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டு சொல்லுகிறாரோ! அந்தக் கடிதம் இப்போது தங்களிடத்தில் இருக்கிறதா?