பக்கம்:மதன கல்யாணி-3.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


136 மதன கல்யாணி கேட்பதற்கு ஆம் அல்லது இல்லை என்ற ஏதாவது ஒரு பதிலைச் சொல்லும். மதன:- அந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்ல முடியாது. பா. குரோட்டன்:- அந்த பெண்ணின் பெயரையாவது சொல்ல லாமா? மதன. அதையும் வெளியிட முடியாது. பா. குரோட்டன்:- சரி! இருக்கட்டும்; நீர் அதைச் சொல்ல வேண்டாம்; தேனாம்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெகடர் வந்து உமக்காக இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவார். அது போகட்டும். நீர் இப்போது எந்த வீட்டிலாவது வீணை கற்றுக் கொடுக்கிறீரா? மதன:- இல்லை. பா. குரோட்டன்:- ஏன்? மதன:- எல்லோரும் நிறுத்திவிட்டார்கள். f_III, குரோட்டன்:- எல்லோரும் ஒரே நாளிலா நிறுத்திவிட்டார்கள்? மதன:- ஆம். பா. குரோட்டன்:- எல்லோரும் அப்படிக் கட்டுப்பாடாக உம்மை விலக்க வேண்டிய காரணமென்ன? மதன:- காரணம் இன்னதென்று எவர்களும் சொல்லவில்லை. பா. குரோட்டன்:- அவர்கள் சொல்லாவிட்டாலும், உம்முடைய மனசில், அதன் காரணம் என்னவாக இருக்கலாம் என்ற நினைவு கூட உண்டாகவில்லையா? மதன:- அது என் பேரில் ஒருவர் பொய்யாகச் சொனன அவதூறின் மேல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். பா. குரோட்டன்:- அபபடி அவதூறு சொன்னது யார்? மதன:- அவர்கள் யார் என்பதை வெளியிட எனக்கு இஷ்ட மில்லை.