பக்கம்:மதன கல்யாணி-3.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


138 மதன கல்யாணி பா. குரோட்டன்:- சரி; அந்தக் கிழவியை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்து அலையில் போட்டதாகவும், அப்போது நீா சுவரின் முடக்கில் ஒளிந்து கொண்டிருந்ததாகவும் சொன்னரே, அப்போது அவர்களை நீா பார்த்தீரா? மதன:- ஆம்; எட்டிப் பார்த்துவிட்டு விரைவாகத் தலையை அப்பால் இழுத்துக் கொண்டேன். பா. குரோட்டன்:- நீர் மறைந்திருந்த இடத்துக்கும் அவர்கள் நின்று அவளை அலையில் போட்ட இடத்துக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? மதன:- சுமார் 20-கஜ தூரம் இருக்கும். பா. குரோட்டன்:- அப்படியானால், அவர்கள் இந்த மைனரும் பாலாம்பாளும் தான் என்பதை அப்போது நீர் தெரிந்து கொள்ள வில்லையே? மதன:- இல்லை. பா. குரோட்டன்:- நல்லது; அதற்கு மறுநாள் சாயுங்காலம் அந்தக் கிழவியை யாரோ குத்திவிட்டு ஓடினதாகவும் மற்றவர்களும் துரத்திக் கொண்டு ஓடினதாகவும் சொன்னரே. நீர் ஏன ஓடவில்லை? மதன:- நான் எழுந்திருந்து ஒடமாட்டாமல் மிகவும் பலவீனமான ஸ்திதியில் படுத்துக் கொண்டிருந்தேன். அதனால் நான் உடனே எழுந்து ஒட முடியவில்லை. பா. குரோட்டன்:- நீர் எங்கே படுத்துக் கொண்டிருந்தீர்? மதன:- அந்தக் கிழவியின் தலைப்பக்கத்தில் நாலைந்து கஜ துரத்துக்கு அப்பால் போட்டிருந்த ஒரு கட்டிலில் படுத்திருந்தேன். பா. குரோட்டன்:- அவள் பக்கத்தில் காலை நீட்டிப் படுத்திருந்தீரா அல்லது தலையை வைத்துப் படுத்திருந்தீரா? மதன:- தலையை வைத்துப் படுத்திருந்தேன். பா. குரோட்டன்:- அப்படியானால், "ஐயோ! அப்பா குத்திப் புட்டானே!" என்று அவள் கத்திய பிறகு தானே நீர் திரும்பி அவள் பக்கம் பார்த்தீர்?