பக்கம்:மதன கல்யாணி-3.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 139 மதன:- ஆம். பா. குரோட்டன்:- அப்படியானால், நீர் அவருடைய முதுகுப் பக்கத்தைத் தானே பார்த்தீர்? மதன:- ஆம். பா. குரோட்டன்:- சரி; அதிருக்கட்டும். நீர் அன்றைய தினத்துக்கு முன் எப்போதாவது இந்த மைனரைப் பார்த்ததுண்டா? மதன:- ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன். பா. குரோட்டன்:- எந்தச் சமயத்தில், எங்கே பார்த்தீர்? மதன:- நான் இநத ஊருக்கு வந்த ஆரம்பத்தில், இவர்களுடைய பங்களாவில், முதல் நாள் வீணை வாசித்த போது, இவர் அங்கே வந்து உட்கார்ந்து பாட்டைக் கேட்டார். அப்போது தான் பார்த்தேன். பா. குரோட்டன்:- ஒகோ! அப்படியா! இவர் கடைசி வரையில் கேட்டுக் கொண்டு இருந்து, உமக்குச் சன்மானம் செய்து அனுப்பினாரா? மதன:- இவர் கடைசி வரையில இருந்தார்; ஆனால் சன்மானம் ஒன்றும் செய்யவில்லை. பா. குரோட்டன்:- உமமைச் சும்மாவா அனுப்பிவிட்டார்? மதன:- இவர் ஒன்றும் பேசவே இல்லை. நான் வாசித்துவிட்டு, இவருடைய தாயாரிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு வந்து விட்டேன். பா. குரோட்டன்:- நீா அந்த இடத்தைவிட்டுப் போன போதுகூட இவர் சும்மாவே எதிரில் உடகார்ந்திருந்தாரா? மதன:- ஆம். பா. குரோட்டன்:- நிரம்ப நல்லது. நீர் இந்த மைனரை இதற்கு முன் ஒரே நாள் பார்த்தீர். அப்போது நீர் வீணை வாசித்துக் கொண்டிருந்தீர். அந்தச் சமயத்தில் உமக்கெதிரில் வந்து உட்கார்ந்த இவர் திரும்பி எழுந்து போகவில்லை; ஆகையால் இவருடைய முதுகுப் பக்கத்தை நீர் அப்போது பார்க்கவில்லை என்பது