பக்கம்:மதன கல்யாணி-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மதன கல்யாணி நிச்சயமாகிறது. ஆகையால், அந்தக் கிழவியைக் குத்திவிட்டு ஓடிய மனிதருடைய முதுகுப் பக்கத்தைப் பார்த்து, அவர் மைனர் என்று சொல்ல சாத்தியப் படாதல்லவா? மதன:- ஆம்; சாத்தியப்படாது தான் - என்றான். உடனே பாரிஸ்டர் குரோட்டன் துரை ஜட்ஜிகளை நோக்கி, "சரி; குறுக்கு விசாரணை இப்போது இவ்வளவோடு நிற்கட்டும்; மற்ற கேள்விகளைப் பின்னால் கேட்கிறேன்; இரண்டாவது சாட்சியைக் கூப்பிடலாம்" என்றார். ஜட்ஜி சர்க்கார் வக்கீலை நோக்கி, "இப்போது செய்யப்பட்ட குறுக்கு விசாரணையில் வெளியான விஷயங்களைப் பற்றி நீங்கள் மறுபடியும் இந்த சாட்சியை விசாரிக்க வேண்டுமானால், விசாரிக்க லாம்" என்றார். சர்க்கார் வக்கீல்:- இந்த சாட்சி எப்படியும் மறுபடி வரப் போகிறார். அப்போது எல்லாக் கேள்விகளையும் ஒரு முட்டாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். அடுத்த சாட்சி கிருஷ்ணாபுரம் ஜெமீந் தாரை விசாரிக்கலாம் - என்று நயமாகக் கூறினார். அதை ஒப்புக் கொண்ட ஜட்ஜி இரண்டாவது சாட்சியை அழைக்கும்படி அனுமதிக்க, சேவகன், "கிருஷ்ணாபுரம் ஜெமீந் தார்! கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார்!" என்று மூன்று தரம் கூப்பிட்டான். உடனே வக்கீல் சிவஞான முதலியார் அந்த ஹால் முழுதும் தமது பார்வையைச் செலுத்தி கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் எங்கே இருக்கிறார் என்று உற்று நோக்கினார். அந்தச் சமயத்தில், பசவண்ண செட்டியார் என்று பொய்ப் பெயர் வைத்திருந்த ஜெமீந்தார் கச்சேரி மண்டபத்திற்குள் நுழைந்து சாட்சியினது கூண்டில் ஏறி நின்றார். அவரைக் கண்ட சிவஞான முதலியார் பெருத்த திகிலும் குழப்பமும் அடைந்தார்; கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரே பசவண்ண செட்டியார் என்று பெயர் வைத்துக் கொண்டு வந்திருப்பவர் என்ற விஷயம் உடனே அவருக்கு விளங்கியது. யெளவனமும், அழகும் வாய்ந்தவராக இருந்த அந்த ஜெமீந்தார் பதினைந்து வருஷ காலத்தில் இளைத்து உருமாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/144&oldid=853276" இலிருந்து மீள்விக்கப்பட்டது