பக்கம்:மதன கல்யாணி-3.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 141 தீகூைடி வளர்த்து, முற்றிலும் வேறாக மாறிப் போய்விட்டாரே என்ற வியப்பும், அவர் தம்மிடத்திலும் உண்மையை வெளியிடா மல் மறைத்துப் பேசியதிலிருந்து தாம் செய்த வஞ்சகச் செயல் களை எல்லாம் அவர் கண்டு கொண்டிருப்பாரோ என்ற திகிலும் கவலையும் கொண்டவராய் வாய்திறந்து பேசமாட்டாமல் மிகுந்த பிரமிப்படைந்து, அப்படியே நாற்காலியில் சாய்ந்துவிட்டார். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் உடனே பிரமாணம் செய்விக்கப் பட, சர்க்கார் வக்கீல் அவரது வாய்மூலமாக அடியில் வரும் விஷயங்களை கிரகித்தார்: நான் கிருஷ்ணாபுரத்தின் ஜெமீந்தார். சென்ற 15-வருவடி காலமாக நான் மைசூரிலிருந்து சந்தனக்கட்டை வியாபாரம் செய்து வருகிறேன். ஜெமீந்தாரியில் வருஷம் ஒன்றுக்கு லட்சம் ரூபாய் வருமானம உண்டு. அவைகளை எல்லாம் பார்த்துக் கொள்வதற் காக, சர்வாதிகாரம் பெற்ற ஓர் ஏஜெண்டை நியமித்து, அவரைக் கொண்டு அதன் காரியங்களைப் பார்த்து வருகிறேன். சந்தனக் கட்டை வியாபாரத்தில் வருஷம் ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்; சுமாா 15-வருவடி காலத்துக்கு முன் என்னுடைய சம்சாரம் இறந்து போனவுடன், நான் சித்தசுவாதீனம் இல்லாதிருந் தமையால், டாக்டர் என்னை துரதேசமாகிய மைசூரில் இருக்கும் படிச் சொன்னார் ஆகையால நான் போயிருந்தேன். என்னுடைய குழந்தைகள் இரண்டும் மைலாப்பூரில் உள்ள என்னுடைய சிநேகிதரான சிவஞான முதலியாருடைய சவரகூடிணையில் இருந்தன. கொஞ்ச காலத்துக்குப் பின் அந்தக் குழந்தைகள் இரண்டும் வாந்திபேதியால இறந்து போய்விட்டன என்று அவர் எழுதிவிட்டார். ஆகையால் நான் இந்த ஊருக்கே வராமல் இதுவரையில் அங்கேயே இருந்தேன். இப்போது நான் இங்கே வந்து சுமார் ஒரு வார காலம் இருக்கலாம். மைலாப்பூரில் கடற்கரையின் மேல் உளள மனோகர விலாசம் என்ற பங்களாவை நான் அறுபது லட்சத்துக்கு வாங்கி சில தினங்களாக அதிலிருந்து வருகிறேன். முதல் சாட்சியாக வந்த மதன கோபாலன் என்பவனும், அவனுடைய தங்கையும என்னோடு கூட இருந்து வருகிறார்கள். என்னுடைய சொந்தக் குழந்தைகள் இறந்து போன செய்தியைக் கேட்ட பிறகு நான் அதே ஏக்கமாக இருந்தேன். அப்போது அந்த ஊரில் ஒரு நாடகக் கம்பெனியார் ஆடிக் கொண்டிருந்தார்கள்.