பக்கம்:மதன கல்யாணி-3.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 143 சமுத்திரக் கரையோரமாகப் போய் உலாவிக் கடற்காற்று வாங்கிவிட்டு வரும்படி அவனை நான் வெளியில் அனுப்பினேன். அப்படிப் போன பையன் ராத்திரி ஆனபிறகும் வந்து சேரவில்லை. என் மனசில் சந்தேகம் உதித்தது, நான் உடனே சில ஆள்களை அழைத்துக் கொண்டு, கையில் லாந்தர்களோடு வெளியில் போய், கடற்கரையோரமெல்லாம் அவனைத் தேடிக் கொண்டு போன போது சற்றுத் துரத்தில் மணலின் மேல், அவனும் ஒரு கிழவியும் மூர்ச்சித்துக் கிடக்கக் கண்டோம். இருவரும் தண்ணிருக்குள் விழுந்த வர்கள் போலக் காணப்பட்டனர். துணிகள் எல்லாம் ஈரமாக இருந்தன: கிழவியினுடைய கைகால்கள் எல்லாம் கட்டப்பட்டிருந் தன. அவைகளை நாங்கள் அவிழ்த்துவிட்டு, மதனகோபாலனை யும், அந்தக் கிழவியையும் என்னுடைய பங்களாவுக்கு எடுத்துக் கொண்டு வந்து, படுக்கைகளில் விட்டு, டாக்டரை வரவழைத்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளைச் செய்து அன்றிரவு முழுதும் அரும்பாடுபட்டுக் கண் விழித்திருந்து, அவர்களுடைய மூர்ச்சையைத் தெளிவித்தோம்; மறுநாட் காலையில் கிழவி செளக்கியமடைந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்து, இந்த மைனருடைய வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தாள். இந்த மைனர் தனக்கும் ஒரு குறவனுக்கும் பிறந்த பிள்ளை என்றும், மாரமங்கலம் ஜெமீந்தாருடைய உண்மையான குழந்தை காணாமல் போய் விட்டபடியால், இவரை மைனராக மாற்றிவிட்டதாகவும், இவர் இந்த பாலாம்பாளோடு சேர்ந்து கெட்டுப் போவதைத் தடுப்பதற் காக ஏதோ ஒர் அலுவலாக அவள இவர்களுடைய பங்களாவின் தோட்டத்துக்குள் போய் ஒளிந்து கொண்டிருந்ததாகவும், அந்தச் சமயத்தில் அவளை இவர்கள் இருவரும் கண்டு கொண்டு, பிடித்து அடித்து உதைத்து வதைத்ததாகவும், தான் உடனே மூர்ச்சித்து வீழ்ந்து விட்டதாகவும், அவள் சொல்லிக் கொண்டிருந்தவள் சோர்ந்து படுத்துவிட்டாள்; பிறகு அவள் சாயுங்காலம் மறுபடியும் எழுந்து, மாரமங்கலத்தின் உண்மையான மைனரை 1000-ரூபாய்க்கு விற்றவன் கட்டையன் குறவன் என்றும், அவனை வாங்கின வனுடைய பெயர் விலாசம் எல்லாம் அடங்கிய ஒரு துண்டுக் காகிதம் தன்னிடத்தில் இருப்பதாகவும், அதைத் தான் ஓரிடத்தில் ஒளித்து வைத்திருப்பதாகவும், அந்த விஷயம் தன்னைத் தவிர வேறே யாருக்கும் தெரியாதென்றும், தான் உடனே போய், un.é5.III–10