வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 11
செட்டியார்:- அது அப்போது என்னிடத்தில் இல்லை; அதைத் தாங்கள் பார்க்க வேண்டுமானால், அவருக்குக் கடிதம் எழுதி நான் அதை வரவழைக்கிறேன்.
வக்கீல்:- சரி; அப்படியே செய்யுங்கள்; அதை நானும் பார்க்க வேண்டும்; நான் அவருக்கு எழுதிய கடிதங்களுக்கு நகல்கள் வைத்துக் கொள்ளவில்லை; அவர் சொல்லுகிறபடி நான் கடிதத்தில் ஏதோ எழுதியிருப்பது ஒரு பக்கமிருக்கட்டும்; நான் அன்றாடம் எழுதி வைத்துள்ள கணக்குகள் இருக்கின்றன. அவரால் எனக்கு எழுதப்பட்ட கடிதங்களும் இருக்கின்றன. அவர் குழந்தைகளுக்கு அனுப்பிய தொகையில் வேறே சில மனிதர்களுக்கும் சிலசில தொகைகள் கொடுக்கும்படி அவர் எழுதியிருக்கிறார். ஆகையால் நான் அந்தக் கடிதங்களையும், கணக்குகளையும் தேடி எடுத்து வைக்கிறேன். தாங்களும் அந்தக் கடிதத்தை வரவழையுங்கள். இப்போது தாங்கள் கணக்குப் பார்க்க வருவது ஒரு நாள் முன்னாக எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் எல்லா தஸ்தாவேஜுகளோடும் சித்தமாக இருப்பேன். ஆகையால் தாங்கள் இன்னொரு நாள் குறிப்பிட்டால, அன்றைய தினம் நாம் இருவரும் சந்தித்துக் கணக்கைப் பைசல் செய்துவிடலாம்.
செட்டியார்:- சரி; அப்படியே ஆகட்டும்; பதினைந்து வருஷமாகப் பைசல் செய்யப்படாமலிருந்த இந்த விஷயமானது இன்னம் சில நாள்கள் இருப்பது ஒரு பெரிய காரியமா! நான் கடிதத்தை வரவழைத்தவுடனே தங்களுக்குச் செய்தி சொல்லி அனுப்புகிறேன். பிறகு நாம் சந்திப்பதற்கு ஒரு நாள் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இப்போது எனக்கும் நேரமாகிறது. தங்களுடைய அவகாசத்திலும் அதிக நேரத்தை நான் அபகரித்து விட்டேன். தங்களுக்கு எவ்வளவோ ஜோலி இருக்கும்; நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். நமஸ்காரம் - என்று கூறிய வண்ணம் எழுந்திருக்க, வக்கீலும் அவருக்கு பதில் நமஸ்காரம் செய்து, அவரது ஏற்பாட்டிற்கு இணங்க, செட்டியார் அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டார்.
வெளிப்பட்டவர் தமது வண்டியில் ஏறிக்கொண்டு நேராகக் கடற்கரைக்குப் போய், அங்கே இருந்த பிரம்மாண்டமான ஒரு
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/15
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
