பக்கம்:மதன கல்யாணி-3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மதன கல்யாணி ஆகிவிட்டீர்கள். தங்களுடைய மனநிலைமை மிகவும் கேவலமாகத் தான் இருக்கும். அதிருக்கட்டும். நான் தங்களிடத்தில் இன்னொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தங்களுக்குப் பைத்தியம் பிடித் திருப்பதாக டாக்டர் சொல்ல, அதன்மேல் தங்களை எல்லோரும் மைசூருக்கு அனுப்பினார்கள் அல்லவா. அதன் பிறகு, தங்களுக்கு அந்தப் பைத்தியம் நீங்கிவிட்டதாக எந்த டாக்டராவது சொன்னாரா? கி. ஜெமீந்தார்:- எனக்கு வைத்தியம் செய்த டாக்டரும் சொன்னார். பைத்தியம் நீங்கிவிட்ட தென்பது எனக்கே தெரிகிறது. பா. குரோட்டன்:- உங்களுக்கே தெரிகிறதென்பது இருக்கட்டும். உங்களுடைய பைத்தியம் நிவர்த்தியாகிவிட்டதாக டாக்டர் சொன்னதற்கு எழுத்து மூலமான ஆதாரம் ஏதாவது தங்களிடத்தில் இருக்கிறதா? கி. ஜெமீந்தார்:- இல்லை. பா. குரோட்டன்:- சரி; நிரம்ப நல்லது. அந்தச் சங்கதி அப்படியே இருக்கட்டும். இறந்து போன கிழவியைத் தாங்கள் இதற்கு முன் எப்போதாவது பார்த்ததுண்டா? கி. ஜெமீந்தார்:- இல்லை. பா. குரோட்டன்:- மாரமங்கலம் ஜெமீந்தாரிணியம்மாளைப் பற்றி இப்படிப்பட்ட அபூர்வமான சங்கதிகளைச் சொன்ன அந்தக் கிழவி பைத்தியக்காரியா, அல்லது, நல்ல நிலைமையில் உள்ள அறிவோ டிருப்பவளா என்பதைத் தாங்கள் நிச்சயமாக அறிந்து கொண்டீர்களா? கி. ஜெமீந்தார்:- இல்லை. பா. குரோட்டன்:- மூர்ச்சித்து, அறிவு பிறழ்ந்து கிடந்து விழித்துக் கொண்டு அவள் பேசிய விஷயமெலலாம், மூளைக்குழப்பத்தினா லுண்டான உளறலாக இருக்கவும் கூடுமல்லவா? கி. ஜெமீந்தார்:- அபபடியும் இருக்கலாம். பா. குரோட்டன்:- தாங்கள் பதினைந்து வருஷமாக மைசூரில் இருந்து இங்கே வந்து ஒருவாரமாகிற தல்லவா. இந்தக் காலத்தில் தாங்கள் இந்த மைனரைப் பார்த்ததில்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/150&oldid=853283" இலிருந்து மீள்விக்கப்பட்டது