பக்கம்:மதன கல்யாணி-3.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 147 கி. ஜெமீந்தார்:- இல்லை. பா. குரோட்டன்:- அபபடியானால் அன்றைய தினம் ராத்திரி தாங்களும் ஆள்களும் இவரைப் பிடித்துக் கொண்டதாகச் சொல்லு கிறீர்களே; அப்போது தானே இவரைத் தாங்கள் முதன் முதல் பார்த்தீர்கள்? கி. ஜெமீந்தார்:- நான் இங்கே வந்த பிறகு ஒருநாள் மாரமங்கலம் பங்களாவின் பக்கமாக ஸாரட்டில் போய்க் கொண்டிருந்த சமயத்தில், இவர் அந்த பங்களாவில் இருந்து வந்தார். என்னுடைய வண்டிக்காரன் இவர் இனனார் என்று சொன்னான். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டேன். பா. குரோட்டன்:- ஒகோ! சரி சரி! அதிருக்கட்டும்; அந்தக் கிழவி படுத்திருந்து குத்தப்பட்ட இடத்துக்கும், ராஜபாட்டைக்கும் எவ்வளவு தூரம் இருககும். கி. ஜெமீந்தார்:- அரை பர்லாங்கு தூரமிருக்கலாம். பா. குரோட்டன்:- அந்த அரை பர்லாங்கு தூரத்திலும் பெருத்த பெருத்த பூத்தொட்டிகளும், மரங்களும் இருக்கின்றன அல்லவா? கி. ஜெமீந்தார்:- ஆம்; இருக்கின்றன. பா. குரோட்டன்:- கிழவியைக் குத்திய மனிதன் சரியான சமயம் பார்த்து உள்ளே வந்து குத்துகிறதானால் அவன் அதற்கு முன் அந்தப் பூததொட்டிகளின் மறைவில் தானே மறைந்து இருக்க வேண்டும்? கி. ஜெமீந்தார்:- ஆம்; அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பா. குரோட்டன்:- அபபடியானால், ராக்காலத்தில் ஒரு மனிதன் அந்தப் பூத்தொட்டிகளின் மறைவில் ஒளிந்து கொண்டால், அவன் இருப்பது பிறருக்குத் தெரியாதல்லவா? கி. ஜெமீந்தார்:- தெரியாது. பா. குரோட்டன்:- நல்லது. அதிருக்கட்டும். கிழவியைக் குத்தி விட்டு ஒடிய மனிதன் பாதையோடு ஒடி ராஜபாட்டையை அடைந்தானா? அல்லது, பூத்தொட்டிகளினிடையில் புகுந்து ஒடி ராஜபாட்டையை அடைந்தானா?