பக்கம்:மதன கல்யாணி-3.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 மதன கல்யாணி கி. ஜெமீந்தார்:- பூத்தொட்டிகளினிடையில் புகுந்துதான் மறைந்து ஓடினான். - பா. குரோட்டன்:- ஒகோ! சரி தான்; அதிருக்கட்டும். கொலை செய்த மனிதன் ராஜபாட்டைக்குப் போய்ச் சேர்ந்து, அங்கிருந்து சமுத்திரத்துக்குள் ஒடிய போது நீங்கள் பின்னால் எவ்வளவு துரத்தில் ஒடினிகள்? கி. ஜெமீந்தார்:- சுமார் 20-கஜத்துக்குப் பின்னால் ஓடினோம். பா. குரோட்டன்:- சரி; கொலை செய்துவிட்டு ஓடிய மனிதன் பூச்செடிக்குள் மறைந்து மறைந்து ஓடினதாகச் சொன்னிகளே. அப்படிக் கொலை செய்துவிட்டு ஓடிய மனிதன் தான் ராஜபாட் டையிலிருந்து சமுத்திரத்துக்குள் ஒடினான் என்பதை நீங்கள் நிச்சய மாகச் சொல்ல முடியுமா? கி. ஜெமீந்தார்:- அந்த மனிதன் பூத்தொட்டிகளுக்குள் மறைந்து ஒடிக் கடைசியில் ராஜபாட்டைக்குப் போய் அங்கே இருந்து ஓடிய படியால், அவன் ஒரே மனிதனாகத் தான் இருக்க வேண்டும். பா. குரோட்டன்:- இந்தக் கொலையைச் செய்வதற்காக வந்த மனிதன் தனக்கு உதவியாக இன்னொரு மனிதனை அழைத்து வரக்கூடும். ஒருவன் பூத்தொட்டிகளினிடையில் மறைந்திருக்க, மற்றொருவன் கட்டிடத்துக்குள் வந்து குத்தியிருக்கலாம். குத்தி விட்டு ஓடியவன பூச்செடிக்குள் மறைந்து தோட்டத்துக்குள் ளேயே இருந்திருக்கலாம. உதவிக்காக வந்தவன் பயந்து கொண்டு வெளியில் ஒட, அவனையே நீங்கள் கொலையாளி என்று பிடித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? கி. ஜெமீந்தார்:- அப்படியும் இருக்கலாம். அப்படியானால், இந்த மைனர் அந்தக் கொலைகாரனுக்கு உதவியாக வந்தவன் என்றா சொல்லுகிறீர்கள்? - பா. குரோட்டன்:- இவர் கொலைகாரனோடு கூட வந்தாரா இல்லையா என்பது இப்போது கேள்வியல்ல. கொலை செய்து விட்டுப் பூத்தொட்டிகளுக்குள் ஒடிய மனிதன் இந்த மைனர் தானா என்பதை நீங்கள் சந்தேகமற உறுதியாகச் சொல்ல முடியா தலலவா? - என்றார்.