பக்கம்:மதன கல்யாணி-3.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 149 கிருஷ்ணாபுரம் ஜெமீநதார் தமது நெற்றியில் கையை வைத்து அழுத்திக் கொண்டு சிநதனை செயகிறார். பா. குரோட்டன்:- அதிருக்கட்டும். அந்த மனிதன் கொலை செய்து விட்டு ஓடியதைக் கண்டு, தாங்கள் கூச்சலிட்ட பிறகு தானே, தங்களுடைய ஆடகள் அங்கே வந்தார்கள். கி. ஜெமீந்தார்:- கொலைகாரன் குத்திவிட்டு வெளியில் ஓடியதைக் கண்டவுடனே நான் கூச்சலிட்டுக் கொண்டு பின்னால் தொடர்ந்து ஒடினேன். எனக்குப் பின்னால் ஆள்கள் வந்து என்னைத் தாண்டி முன்னால் ஒடித் துரத்தினார்கள். பா. குரோட்டன்:- அப்படியானால், அந்தக் கொலைகாரன் கிழவி இருந்த கட்டிடத்தை விட்டு வெளியில் வந்து பூத்தொட்டிகளுக் குள் நுழைந்த பிறகு தானே ஆள்கள் வந்தார்கள்? கி. ஜெமீந்தார்:- ஆம். பா. குரோட்டன்:- அப்படியானால், கொலை செய்தவன் தான் பூச்செடிக்குள் ஓடினான் என்று, தாங்கள் சொன்னதிலிருந்து வேலைக்காரர்கள் தெரிந்து கொண்டார்களேயன்றி, அவர்கள் நேரில் அதைக் கண்டுணரவில்லையே? கி. ஜெமீந்தார்:- இலலை. பா. குரோட்டன்:- சிாமப நல்லது; இன்னம் ஒரே ஒரு விஷயம். அதை மாத்திரம் சொலலிவிடுங்கள். கிழவியைக் குத்திய கத்தி மிகவும் கூர்மையான கத்தியாகத்தானே இருந்தது? கி. ஜெமீந்தார்:- ஆம். பா. குரோட்டன்:- நீ கள் மைனரை பிடித்த போது அந்தக் கத்தி எங்கே இருந்தது. கி. ஜெமீந்தார்:- அவர் அதை அவருடைய இடுப்பில் சொருகிக் கொண்டிருந்தார். பா. குரோட்டன்:- கொலை செய்துவிட்டு செடிகளுக்குள் விழுந்து தடபுடலாக ஒடுகிற மனிதன் அதை எறிந்துவிட நினைப் பானா, அல்லது, அதைக் கையிலே வைத்துக் கொண்டே போவானா? அப்படி எடுத்துக் கொண்டு போவதாகவே வைத்துக்