பக்கம்:மதன கல்யாணி-3.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 151 பா. குரோட்டன்:- சரி; சொல்ல வேண்டாம். மைனருடைய மடியில் கத்தி இருந்தது அந்த இருட்டில் உங்களுக்கு எப்படி தெரிந்தது? கி. ஜெமீந்தார்:- (சிறிது யோசித்து) அப்போ தெரியவில்லை. ராஜபாட்டையில் இருந்த விளக்கண்டை வந்த பிறகு தான், நாங்கள் கத்தியைக் கண்டோம் - என்றார். அதைக் கேட்ட பாரிஸ்டர் குரோட்டன் துரை, "சரி, அப்படி யானால் மைனர் ஒடிய போதே அவருடைய மடியில் அந்தக் கத்தி இருந்ததா, அல்லது, அவரைப் பிடித்துக் கொண்டபின் அந்தக் கும்பலில் யாராவது அவருடைய மடியில் சொருகிவிட்டார்களா என்ற விஷயம், அந்த இருளில் போலிஸ் ஜெவானுக்கு நிச்சய மாகத் தெரிய நியாயமில்லை; சரி; இந்தக் குறுக்கு விசாரணையை இவ்வளவோடு நான் இபபோது நிறுத்திக் கொள்கிறேன். வேண்டு மானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறிய வண்ணம் கீழே உடகார்ந்து கொண்டார். உடனே கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் கூண்டை விட்டிறங்கி அப்பால் சென்றார். மதனகோபாலனும், கிருஷ்ணாபுரம் ஜெமீந் தாரும் வாக்குமூலம கொடுதத உடனே அதைக் கேட்டிருந்த ஜனங்கள் எல்லோரும், மைனர் கொலை செய்தது நிச்சயமென்று தீர்மானித்துக் கொண்டனா; ஆனால், பாரிஸ்டர் குரோட்டன் துரை குறுக்கு விசாரணை செய்த பிறகு அவாகளது தீர்மானம் கலகலத்துப் போகத் தொடங்கியது. மைனர் ஒருவேளை குற்ற மற்றவனாக இருப்பானோ என்ற எண்ணமும் தோன்ற ஆரமபித்தது. அதன் பிறகு கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது ஆட்களில் முக்கியமான இருவரும், கடற்கரையில் மைனரை ஒப்புக் கொண்ட போலீஸ் ஜெவானும் ஒருவர் பின் ஒருவராக வந்து வாக்குமூலம் கொடுததனர். அவாகளது வாக்குமூலம் கிருஷ்ணாபுரம் ஜெமீநதாரது வாக்குமூலத்திற்கு அநுசரணையாகவே இருந்தது. உடனே பாரிஸ்டர் குரோடடன் துரை மிகவும் தந்திரமாக அவர்களையும் குறுக்கு விசாரணை செயது, அவர்களது வாக்கு மூலத்தையும் பயனற்றதாகவும சநதேககரமானதாகவும் ஆக்கி விட்டாா. அதைக கணட ஜனங்கள யாவரும் பாரிஸ்டர்