வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 153
ரணத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தேன். மார்பெலும்புகளுள் ஒன்று ஒடிந்து போயிருந்தது. வலது ாரல்வை வரையில் கத்தி சென்றிருந்ததானாலும், அதன்மேல் எவ்விதக் காயமும் படவில்லை. ஆகையால், அவளைப் பிழைக்க வைத்து விடலாம் என்ற ஒரு தைரியம் எனக்கு உண்டாயிற்று. ஆகையால், நான் உடனே அவளுக்கு ஒரு மருந்தைக் கொடுத்து, ஒடிந்து போயிருந்த எலும்பை எடுத்துவிட்டு மார்பின் பிளப்பை ஒன்றாகச் சேர்த்து விரைவாகத் தையல் போட்டு, அதன் மேலே நல்ல மருந்தை வைத்துக் கட்டிவிட்டு அவளுக்குக் குளிர்ச்சியான பானம் கொடுத்துப் பருகச் செய்து ஒரு கட்டிலின் மேல் விடச் செய்தேன். உடனே அவள் தனது கண்களைத் திறந்து கொண்டு பேசத் தொடங்கி, தன்னுடைய உயிர் அரைமணிக்கு மேல் நிற்காதென் றும், தான் முக்கியமான சில ரகசிய சங்கதிகளை வெளியிட வேண்டும் என்றும், அதை எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னாள். அவளது நாடியும் வரவரத் தளர்வடைந்து வந்ததைக் காண, அவள பிழைக்க மாட்டாள் என்ற ஒரு நினைவும் என் மனசில் உண்டாகிக் கொண்டே இருந்தது. அவள் மேன்மேலும் வற்புறுத்திக் கொண்டே இருந்தாள். அப்போது அங்கே வந்து சேர்ந்த மைலாப்பூர் சட இனஸ்பெக்டர் பிரசிடென்சி மாஜிஸ்டி ரேட்டுக்கு டெலிபோன மூலமாகச் செய்தியனுப்ப, கால்மணி நேரத்தில் அவர் மோட்டார் வண்டியில் வந்து சேர்ந்தார். அப்படி வந்தவர், என்னையும சப் இன்ஸ்பெக்டரையும தவிர, மற்றவர் களை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டுக் கிழவி சொன்ன விஷயங்களை எல்லாம் எழுதிக் கொண்டார். அவள் வாக்குமூலம் கொடுக்கும் போதே சோர்ந்து கண்களை மூடி உறங்கினவள் வாக்குமூலம் முடியும் போது மயங்கி விழுந்து மறுபடியும் உணர்வு பெறவில்லை; உடனே சுவாசம் வாயால் வரத்தொடங்கி யது. பிறகு பத்து நிமிஷத்தில் அவளுடைய பிராணன் போய் விட்டது. மாஜிஸ்டிரேட்டு வாங்கிய வாக்குமூலத்தில் நானும் சப் இன்ஸ்பெக்டரும் கையெழுத்து வைத்தோம்; அது ஒரு கெட்டி யான உறைக்குள் பேரிடப்பட்டதன்றி அந்த உறையின் ஒட்டு களில் அரக்கு முத்திரைகள் வைக்கப்பட்டன. அந்த முத்திரைகள் எங்கள் வைத்தியசாலையைச் சேர்ந்த முகரினால் (Sea) வைக்கப்
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/157
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
