பக்கம்:மதன கல்யாணி-3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 155 ச. துரை:- அவள் மிகவும் வயதாகித் தளர்ந்த கிழவியாகையால், அவளுடைய உடம்பிலிருந்த உதிரத்தில் பெரும்பாகமும் சேதமாகி விடவே, இருதயம் தானாக நின்றிருக்க வேண்டும் என்று அபிப்பி ராயப் படுகிறேன். பா. குரோட்டன்:- நிரம்பவும் நல்லது. குத்தப்பட்ட பின எவ்வளவு நேரத்துக்குப் பிறகு அவள உங்களிடம் வந்திருப்பாள்? ச. துரை:- அரைமணி நேரத்துக்குள்ளாகவே வந்திருக்கலாம். பா. குரோட்டன்:- அவளுடைய தேகத்திலிருந்த இரத்தமெல்லாம் அநேகமாக வந்துவிட்டதாகச் சொன்னிகளே; கத்தியால் குத்தப் பட்ட நேரம் முதல், அங்கிருந்தவர்கள சர்க்கரை முதலியவைகளைக் கட்டியதற்குள்ளாகத் தானே அந்த ரத்தத்தில் பெரும்பாகமும் வெளிப்பட்டிருக்க வேண்டும்? ச. துரை:- ஆம். பா. குரோட்டன்:- சரி; அதிருக்கட்டும். ஒருவருக்குச் சாதாரணமாக ரத்தக்காயம் பட்டால், அதைப் பார்ப்போருக்கு மயக்கம் வந்து விடுகிறதே; அது எதனால? ச. துரை:- பயத்தினால் மூளையும் உணாவும் கலங்கிப் போவதால் மயக்கம் வருகிறது. பா. குரோட்டன்:- கண்ணால் பார்க்கும் மற்றவருடைய நிலைமை அப்படியானால், இரத்தம் சிந்தும் தேகத்தையுடைய மனிதருக்கு அப்படிப்பட்ட குழப்பம அதிகமாக ஏற்படுமல்லவா? ச. துரை:- அவர்களுக்கு நிரம்பவும அதிகமாக ஏற்படும். அவர்கள் முற்றிலும் ஸ்மரணை தப்பிப் போய்விடுவாாகள். பா. குரோட்டன்:- இப்போது கொலையுண்ட கிழவி மிகவும வயதாகித் தளர்நதிருந்தவள். அவளுடைய மார்பில் பெருத்த குத்துக் காயம் ஏற்பட்டது. எலும்பு முறிந்து போய்விட்டதன்றி, இரத்தமும் அநேகமாய சேதமாகிவிட்டது. ஆகையால் அவளும் ஸ்மரணை தப்பியிருந்த நிலைமையில் தானே வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டாள்? ச. துரை:- ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/159&oldid=853292" இலிருந்து மீள்விக்கப்பட்டது