பக்கம்:மதன கல்யாணி-3.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 மதன கல்யாணி பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தார். அவர் பங்களா வாங்கிய விஷயமாக சிவஞான முதலியாரிடத்தில் பேசிக் கொண்டிருந்த சங்கதிகள் யாவும் உண்மையானவை ஆகையால், அவர் அந்த பங்களாவை வாங்கிய வரலாற்றையெல்லாம் மறுபடியும் விரிவாகச் சொல்வது மிகையாகும். அவர் அன்றைய மாலை வரையில் அவ்விடத்திலேயே இருந்து ஒவ்வொருவராக வந்த புதிய வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும் அவரவர் களுக்குரிய இடங்களிலும் வேலைகளிலும் அமர்த்திய பிறகு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு கோமளேசுவரன் பேட்டையி லிருந்த மதனகோபாலனது ஜாகையை அடைந்து, அன்றிரவு முழுதும் அங்கேயே இருந்து, மறுநாள் அதிகாலையில், மதன கோபாலனையும், மோகனாங்கியையும் அழைத்துக் கொண்டு மைலாப்பூரில் உள்ள தமது புதிய பங்களாவிற்கு வந்து சேர்ந்தார். கோமளேசுவரன் பேட்டையிலிருந்த பணிமக்கள் எல்லோரும் அங்கிருந்த தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு ஒரு நாழிகை நேரத்தில் புதிய பங்களாவிற்கு வந்து சேர்ந்தனர். துப்பாக்கியால் சுடப்பட்டு மிகவும் கேவலமான நிலைமையி லிருந்த மதனகோபாலனை அவர்கள் எப்படி அழைத்து வந்தார்கள் என்ற சந்தேகம் நமது வாசகாகளுக்கு உணடாகலாம். துப்பாக்கியால் சுடப்பட்ட அன்றைய ராத்திரியே டாக்டர் அவனது காயத்திற்கு நல்ல மருந்தை வைத்துக் கட்டியதன்றி, அவன் அன்றிரவு முழுதும் ஒய்ந்து படுத்துத் துங்கும்படி போதை கலந்த மருந்தைக் கொடுத்து வைத்திருந்தார் அல்லவா. அவ்வாறே அன்றிரவு முழுதும் அவன் உயிரற்ற பிணம் போலக் கிடந்தான் ஆனாலும், மறுநாட் காலையில், அவர் நன்றாகத் தெளிவடைந்து அவன் நன்றாகத் தெளிவடைந்து எழுந்து தனது படுக்கையில் சாய்ந்து கொண்டான். அவனுக்கு ஜூரம் முதலிய எவ்வித பாதையும் ஏற்படவில்லை. அப்போது அந்த டாக்டர் வந்து காயத்தின் கட்டை அவிழ்த்து, விலையுயர்ந்த அருமையான மருந்துகளை வைத்து மறுபடியும் கட்டி, இரத்தமுண்டாக்கும் ஜீவாமிருதத் துளிகளை உள்ளுக்கும் கொடுத்துவிட்டுச் சென்றார். அவன் சாதாரணமாக எழுந்து உட்காரவும், படுக்கவும், நடக்கவும் கூடிய ஸ்திதியில் இருந்தான்.