பக்கம்:மதன கல்யாணி-3.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 மதன கல்யாணி பா. குரோட்டன்:- அதன் பிறகு தாங்கள் கொடுத்த மருந்தினால் விழித்துக் கொண்டு பேசினாளோ? ச. துரை:- ஆம். பா. குரோட்டன்:- அப்போது அவளுடைய உயிர் கொஞ்சங் கொஞசமாகப் போயக்கொண்டே இருந்ததென்று சொலலலாம் அல்லவா? ச. துரை:- இருதயத்தின் கட்டு படிப்படியாகத் தளர்ந்து கொண்டு தான் வந்திருக்க வேண்டும். அதனால் இரத்த ஒட்டமும் குறைவு பட்டுக் கொண்டே போகும். இரத்தம் குறைவுபடுமானால், ஒவ்வொரு கருவியும் தளாந்து சோர்ந்து போகத் தொடங்கும் ஆகையால் உயிர் கொஞ்சங் கொஞ்சமாகப் போய்க் கொண்டே இருந்ததாகத் தான் சொல்ல வேண்டும். பா. குரோட்டன்:- நிரம்ப நல்லது. அந்தக் கிழவி குத்தப்பட்ட உடனே அதிக இரத்தம் வெளிப்பட்டுப் போனதனால் ஏற்கெனவே மயங்கி ஸ்மரணை தப்பிப் போய்விட்டாள். அந்த நிலைமையில் அவளுடைய ரத்த ஒட்டம் குறைந்து கருவிகள் எல்லாம் ஒய்ந்து போவதால், அவளுடைய உயிர் போய்க் கொண்டே இருந்தது. அப்போது அவளுடைய மூளையும் கலங்கிக் குழம்பித் தளர் வடைந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் தாங்கள் கொடுத்த மருந்தினால், கொஞ்சம் தெளிவடைந்து தானே அவள் பேசினாள்? ச. துரை:- ஆம். .-- பா. குரோட்டன்:- அவள் அந்தச் சமயத்தில் அடைந்தது மிகவும் சொற்பமான தெளிவாக இருக்குமா? அல்லது, அவளுடைய இயற்கைத் தெளிவு முழுதும் ஏற்பட்டிருக்குமா? ச. துரை:- அந்தச் சமயத்தில் அவளுக்கு ஏற்பட்ட தெளிவு, அவளுடைய இயற்கைத் தெளிவில் நூறில் ஒருபாகம் இருக்கும் என்று சொல்லலாம். பா. குரோட்டன்:- ஒகோ! அவ்வளவு தானா? அப்படியானால், அவள் அதன் பிறகு, மாஜிஸ்டிரேட்டின் முன்பாக வாக்குமூலம் கொடுத்த போது, முன்னிருந்த தெளிவும் குறைவுபட்டுத் தானே இருக்கும். ۔--