பக்கம்:மதன கல்யாணி-3.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157 ச. துரை:- ஆம். பா. குரோட்டன்:- அவள் வாக்குமூலம் கொடுத்த போது முதலி லிருந்து முடிவு வரையில் தெளிவாகவே இருந்து கொடுத்தாளா? ச. துரை:- இல்லை இலலை. அவள் இரண்டு வாக்கியம் பேசுவாள்; உடனே மயங்கி விழுவாள்; மறுபடியும் பேசுவாள்; அப்படிப் பல தடவைகள மயங்கி விழுந்தாள். வாக்குமூலம் முடியும் முன் அவளே முடிந்து போய்விட்டாள். பா. குரோட்டன்:- அநேகமாக உயிர் போன நிலைமையில் அவள் கொடுத்த இந்த வாக்குமூலத்தை அவள் தெளிவான உணர் வோடு கொடுத்த வாக்குமூலம் என்று நாம் நினைக்கலாமா? ச. துரை:- அப்படி நினைக்க முடியாது. மனமும் அறிவும் மிகவும் குழம்பித் தெளிவற்றிருந்த நிலைமையிலே தான் இந்த வாக்கு மூலம் கொடுக்கப்படடதாக நான் அபிப்பிராயப்படுகிறேன். பா. குரோட்டன்:- நிரம்பவும் நல்லது. அதிருக்கட்டும்; கள், சாராயம் முதலிய லாகிரி வஸ்துக்களினால் மனிதருடைய மூளை குழம்பித் தெளிவற்றுப் போகிறதே. அந்த நிலைமைக்கு இதை ஒப்பிடலாமா, அல்லது, அதைவிட இது கேவலமாக இருக்குமா? ச. துரை:- குடிமயக்க நிலைமையைவிட இந்த நிலைமை மிகவும் கேவலமாக இருக்கும் எனறே நான் அபிப்பிராயப்படுகிறேன். பா. குரோட்டன்:- அப்படியானால், குடிகாரன் சம்பந்தா சம்பந்த மின்றித் தாறுமாறாகப் பிதற்றுவதற்கு எவ்வளவு மதிப்புண்டோ அவ்வளவு மதிப்புக்கூட அவளுடைய வாக்குமூலத்துக்கு ஏற்பட நியாயமில்லை என்றல்லவா அருத்தமாகிறது? ச. துரை:- நியாயமாகப் பார்த்தால், அப்படித்தான் நாம் நினைக்க வேண்டும். பா. குரோட்டன்:- (புன்னகையும் மகிழ்ச்சியும் தோற்றுவித்தவ ராய்) நிரம்ப சந்தோஷம; எங்களுடைய முக்கியமான சந்தேகத் தைத் தாங்கள் தீர்த்து வைத்ததைப்பற்றி நான் மிகுந்த நன்றியறிதல் உள்ளவனாக இருக்கிறேன். இவ்வளவு தான் கேள்வி; நான் தங்களை இதற்கு மேல சிரமப்படுத்தவில்லை - என்று கூறிய