பக்கம்:மதன கல்யாணி-3.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 159 அந்தச் சமயத்தில் விசாரணை குமாஸ்தா ஒரு தஸ்தாவேஜை எடுத்து அவரிடத்தில் கொடுத்து, அதுதானா அவரால் முத்திரை வைத்து அனுப்பப்பட்ட உறை என்று கேட்க, மாஜிஸ்டிரேட் அதைத் தமது கைகளில் வாங்கி உற்றுப் பார்த்து அதுதான் என்றும், அது தம்மால் அனுப்பப்பட்டபடியே இருப்பதாகவும் கூறினார். அந்த உறையைத் திறந்து அதற்குள் இருந்த வாக்கு மூலத்தை எடுத்து படிக்கும்படி ஜட்ஜி சொல்ல, உடனே மாஜிஸ் டிரேட்டு, உறையின் ஒரு புறத்தைக் கிழித்து உள்ளே இருந்த வாக்குமூலத்தை எடுத்துப் படிக்கலானார். அந்த அம்பட்ட கிழவி மிகவும் அபூர்வமான ரகசிய சங்கதிகளை வெளியிட்டிருக்கிறாள் என்ற வதந்தி ஊர் முழுதும் பரவிப் போயிருந்தமையால், ஜனங்கள் எல்லோரும் பேச்சு மூச்சின்றி நிச்சப்தமாக இருந்து அதைக் கவனிக்க ஆயத்தமாயினர். மாஜிஸ்டிரேட்டு அந்த வாக்குமூலத்தைப் படிக்க, அது அடியில் வருமாறு இருந்தது:- தொரெகளே! பதினஞ்சு பதினாறு வருசத்துக்கு மின்னெ, நான் நல்ல வயசுப் பொம்புள்ளெயா இருந்தப்ப, நான் தேனாம்பேட்டையிலே இருக்கற செமீந்தாரு ஊட்டுங்களுக் கெல்லாம் போயி, மருத்துவம் பாக்கறது வளமையிங்க. எனக்கு அப்ப ஒரு புருசன் இருந்தான். அவன் குடுகுடு கெயவன்; அவன் மேலே எனக்குப் பிரியமில்லெ. இன்னொரு கொறவன் இருந்தான். அவனுக்கும் எனக்கும் ஒரு ஆம்புள்ளெக் கொயந்தே பொறந்திருந்திச்சு கட்டெயனுன்னு ஒரு திருடன் இருக்கறானல்ல. அவனோடெ கூடச் சேர்ந்துக்கினு என்னேடெ கள்ளப்புருசனும் திருடப்போற வளமையிங்க. அவன் ஒரு ராவுலெ வந்து, மாரமங்கலம் செமீந்தாரு ஆட்டுக் கொயந்தெயெத் திருடிக் கொன்னு போட்டுட, அந்தக் கொயந்தெயோடெ சித்தப் பாருமவன் கட்டெயங்கிட்ட அஞ்சாயிரம் ரூபா கொடுத்தானுன்னும், அதுக்காவக் கட்டெயன் பொறப்பிட்டுப் போயிருக்கானுன்னும் எங்கிட்டச் சொன்னான். ரெண்டுமூணு நாளெக்கிப் பொறவாலெ கட்டெயன் கொறவன் எங்க ஊட்டுக்கே வந்து சங்கதியெல்லாஞ் சொன்னான். தான் போயி புள்ளெயத் திருடிக்கினு வந்த சமயத்துலெ, அது கந்தருவக் கொயந்தெ கணக்கா இருந்ததெக் கண்டு, அதெக் கொல்ல மனம் ம.க.iii-11 -