பக்கம்:மதன கல்யாணி-3.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


162 மதன கல்யாணி சந்தோசப்பட்டா. அன்னெக்கி ராவுலே நானே அந்தக் கொயந்தெயெ எடுத்துக்கினு போயி, அதெத் திருடியாந்த கட்டெயன் கொறவன் என்னோடெ செநெகிதகாரனுன்னும், அதெ நான் வாங்கியாந் தேனுன்னும் சொல்லிப் புள்ளெயக் குடுத்தேன். அந்தக் கொயந்தே சுத்தமா வேறெயா இருந்தத்தெப் பத்தி அவுங்க ரொம்ப நேரம் சந்தேவப்பட்டாங்க. அது கேவுரு கூளு தின்னத்துனாலே அப்பிடிக் கருத்து எளச்சி உருமாறிப் போச்சின்னு நான் சொல்ல, அதுக்கு மேலே பொன்னம்மா அந்த மச்சத்தெக்காட்டி, அந்தக் கொயந்தெதான் திருட்டுப் போனதுன்னு சொல்லி சத்தியம் பண்ணினா. அதுக்கு மேலெ தான் அந்த செமீந்தாரம்மா அதெ ஒப்பிக்கின்னு கட்டெயனுக்கின்னு அஞ்சாயிரம் ருவாயும், எனக்கின்னு நூறு ரூவாயும் குடுத்து அனுப்பிச்சாங்க. நான் நொம்ப சந்தோசமா ஊடு போயிச் சேந்தேன். அன்னெக்கி ராவுலெ அந்தப் பொன்னம்மா திரியும் அங்கனே வந்து தனக்கு ஏதாச்சும் பணம் குடுக்கணுமின்னு கெஞ்சினா. நான் ஒடனே அந்தப் பணத்துலே பாதியெ எடுத்து அவளுக்குக் குடுத்து அனுப்பிச்சுட்டேன்; அப்ப எம்மனசுலெ இன்னொரு பயமுண்டாச்சு. கட்டெயன் கொறவன் அந்த அம்மாக்கிட்டப் போயி ஏதாச்சும் பணம் பேசிக்கினு, நெசக் கொயந்தே இருக்கற எடத்தெச் சொல்லிப்புட்டா வம்பாப்பூடு மேன்னு நெனெச்சு நான் என்னா பண்ணினேன்னா, அவன் குடுத்த ரோகாவெ ஒரு மொந்தெக்குள்ளற போட்டு, வாயெ அடச்சு, எங்க வூட்டுக்காமரா உள்ளுலெ மாடத்துக்கு மேலெ சொவத்தெத் தோண்டி அதுக்குள்ளற வச்சுப் பொதெச்சுப் புட்டேன். அந்த ரோகாவெ மறந்தேபூட்டான். அதுக்குப் பத்து வருசத்துப் பொறவாலே எங்க ஊட்டுக்காரக் கெயவன் எறந்து பூட்டான். அவன் போன ரெண்டு வருசத்துக்குப் பொறவாலே, என்னோடெ கள்ளப்புருசன் ஒரு கொள்ளெக் கேசுலெ மாட்டிக்கினு ஏளு வருசம் தண்டென ஆயி செயிலுக்குப் பூட்டான். அதுக்குள்ளற எங்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் நான் குடிச்சே தீத்தேன். அப்பாலெ கையிலெ ஒரு காசுகூட இல்லாமெ நான் நொம்பக் கஸ்டப்பட்டேன். சோறில்லாமெ ரெண்டு நாளு மூணு நாளு சேந்தாப்பலே பட்டினி கெடப்பேன். இடுப்புலெ கட்டத் துணியில்லெ. எம் மனசுலே ஒரு ரோசனே உண்டாச்சு. அப்ப,