பக்கம்:மதன கல்யாணி-3.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


164 மதன கல்யாணி இருந்த பணத்தெ யெல்லாம் அடிச்சுக்கப் பாத்தான்; ஆனா அந்தப் பையனோடெ அடையாளம் அவனுக்கு என்னமாவோ தெரிஞ்சி சிருந்திருச்சு. அவன் மாரமங்கலம் மைனராச்சே இன்னு கட்டையன் சொன்னான். ஒடனே எனக்கு நெனப்பு வந்திச்சு. அவன் எம்மவ னாச்சேங்கற சங்கதியெ நான் நெனச்சுக்கினேன். அவனெக் கொல்லவும் மனம் வல்லெ. கொன்னுப்புட்டா, செமீந்தாரம்மா கிட்ட் பணம்புடுங்க முடியாமெப் பூடுமேங்கற, கவலெயும் உண்டாச்சு. கட்டெயனெக் கெஞ்சிக் கூத்தாடி அப்பாலெ இட்டுக்கினு போனேன். அதுக்குள்ளற பையன் தப்பிச்சு ஒடிப் பூட்டான் கட்டெயன் என்னெப் புடிச்சுக்கினான். நான் ஒடனே போயி, செமீந்தாரம்மாக்கிட்டப் பணம் வாங்கியாந்து கட்டெய னுக்குக் குடுத்தேன். அதுக்குப் பொறவாலெ எம்மவன் எப்பிடியோ அந்த வாலாம்பாளேப் புடிச்சுக்கினு அவளுக்கு ஒரு பத்தரத்தெ மொள்ள எடுத்தாரணுமின்னு செமீந்தாரம்மா கட்டெய னையும் என்னெயும் அனுப்பிச்சாங்க. நாங்க போயிக கொண் டாந்து குடுத்து ஆளுக்குப் பதினாயிரம் ரூபா வாங்கிக்கினோம். அந்தப் பத்தரத்தை மைனர் ரிசித்திரி ஆப்பிசுலெ பதிஞ்சிருந் தானுன்னு சங்கதி தெரிஞ்சு, அந்த அம்மா மயங்கி உளுந்துட்டாங்க வாலாம்பாளெத் தூக்கிக்கினு போயி எங்கனெயாச்சும் ஒளிய வச்சுப்புட்ற துன்னு கட்டெயன் தீர்மானம் பண்ணிக்கினு இன்னெக்கி உருமத்துலே என்னெ இட்டுக்கினு போயி, எம்மவனும் வாலாம்பாளும் இருந்த வங்கலாவுக்குப் பக்கத்துலெ தென்னஞ் சோலை இருக்குது. அவன் மதிளுமேலெ ஏறி உக்காந்துக்கினு என்னெத் துக்கி உள்ளற உட்டுப்புட்டு திரியும் வாறேனுன்னு சொல்லிப்புட்டுப் போனான்; அங்கனெயே அதுக்குள்ளற போயி நான் மறஞ்சிருந்தேன். அவுங்க ரெண்டுபேரும் என்னெக் கண்டுக்கினு ஒடியாந்து என்னெப் புடிச்சு அடிச்சு ஒதெச்சுக் குத்தி குத்துசுரும் கொலெ உசிருமாக்கி கையெயும் காலெயும் கட்டி சமுத்தரத்துலெ போட்டாங்க கிட்டுணாபுரம் செமீந்தாரு வூட்டுப் பையன் என்னெ எடுத்தாராம். அவுங்க வங்களாவுலெ என்னெக் கட்டுலுலெ படுக்கவச்சு எனக்கு மருந்தெல்லாம் குடுத்தாங்க; நான் தேறி எந்திருச்சு உக்காந்து இந்த சங்கதியெல்லாம் கிட்டுணாபுரம்