பக்கம்:மதன கல்யாணி-3.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 13 கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் அன்றைய நடுப்பகல் வரையில் அவனோடிருந்து, அவனுக்கும் கண்மணியம்மாளுக்கும் நடந்த சம்பாஷணையின் விவரத்தை எல்லாம் கேட்டறிந்து கொண்ட பிறகே அங்கிருந்து புறப்பட்டு துரைராஜாவிடத்திற்கு வந்தார்; வந்தவர் துரைராஜா ஒருவேளை சுந்தர விலாசத்திற்கு வந்து மதனகோபாலனையும், மோகனாங்கி யையும் பார்க்க ஆசைப் படுவானோ என்றும், அவ்வாறு காணவிடாமல் தடுக்க வேண்டும் என்றும் நினைத்தே, அவன் மிகவும் கேவலமான நிலைமையில் இருக்கிறான் என்றும், ஜூரத்தினால் கண்ணைத் திறக்காமலே கிடக்கிறான் என்றும், சந்தர்ப்பத்திற்குத தகுந்தபடி ஒரு பொய் முகாந்திரம் சொல்லி, அவன் வராதபடி செய்து வைத்தார். அன்றைய தினம் முழுதும் எவ்விதமான சலனமுமற்றுப் படுத்திருந்தான் ஆகையால், மூன்றாவது நாட் காலையில், அவன் அநேகமாகக் குணமடைந்து சாதாரணமாக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கக்கூடிய நிலைமையை அடைந்து விட்டான். ஆனால் வலது காலின் ஆடு சதையில் மாத்திரம் ஒரு சிறிய காயமிருந்தது ஆகையால், அப்போதைக்கப்போது கொஞ்சம் நோவுண்டாகிக் கொண்டிருந்தது. அவன் நல்ல யெளவனப் பருவத்தினனாகையால், அவனுக்கு உதிர நஷ்ட்த்தினால் ஏற்பட்ட அயர்வும் பலவீனமும் இரண்டு நாளைய உட்பிர யோகத்தினா லேயே அநேகமாக விலகிப் போயினவாகையால், அவன் தனது பழைய உற்சாகத்தையும், முகத்தெளிவையும், சுறுசுறுப்பையும் அடைந்திருந்தான்; ஆனாலும் அடிக்கடி உட்கார்ந்து கொள்வதும், படுக்கையில் சாய்ந்து கொள்வதுமே அவனுக்குப் பிடித்தமாக இருந்தன. அந்த நிலைமையில் அவன் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் மைலாப்பூரில் புதிதாக வாங்கிய பெருத்த பங்களாவுக்கு வந்து சேர்ந்தான். அந்த பங்களா ஒர் அரசனது அரண்மனை போலச் சகலமான வசதிகளையும் செளகரியங்களையும் உடையதாக இருந்தது. அதற்குள்ளிருந்த எண்ணிறந்த அந்தப்புரங்களும், மண்டபங்களும், உப்பரிகைகளும் வெகு அலங்காரமாக அமைக் கப்பட்டிருந்தன. எங்கும் மேஜைகளும், நாற்காலிகளும், சோபாக் களும், பஞ்சணைகளும், நிலைக் கண்ணாடிகளும், படங்களும், மின்சார விசிறிகளும், மின்சார விளக்குக் கொத்துகளும் நிறைந்து,