பக்கம்:மதன கல்யாணி-3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 167 சொற்பப் பிரயாசையோடு பணம் முழுதும் ஜீரணமாகிப் போனதைப் பற்றி அவர் பெரிதும் ஆனந்தம் எய்தினார். அந்தச் சமயத்தில் ஜட்ஜிதுரை மைனரைத் தமக்கருகில் அழைத்து வரச் செய்து, அவனது மார்பில் காணப்பட்ட மச்சத்தைப் பார்க்க, ஜட்ஜியும், ஜூரிப்பிரபுக்களும், சர்க்கார் வக்கீலும் அதைப் பார்த்துக் கொண்டனர். உடனே மைனர் முன்போலக் கைதிக் கூண்டில் கொண்டு போய் நிறுத்தப்பட்டான். அப்போது மைனர் நடைப்பிணம் போல இருந்தான் என்று சொல்வதே பொருத்த மாகும். மதனகோபாலன் முதல் மாஜிஸ்டிரேட்டு வரையில் உள்ள சாட்சிகள் யாவரும் வாக்குமூலம் கொடுத்ததையும், பாரிஸ்டர் குரோட்டன் துரை ஒவ்வொருவரையும் குறுக்கு விசாரணை செய்து அவர்களது வாக்குமூலங்களைச் சின்னா பின்னாமாக்கி யதையும் கேட்டுக் கொண்டே வந்த மைனர் மிகுந்த துணிவும் உற்சாகமும் அடைந்தவனாய், பாரிஸ்டர் குரோட்டன் துரை முதலியோர் தன்னை எப்படியும் தப்பவைத்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். தான் அம்பட்டக் கருப்பாயியின் மகன் என்பதை அவன் அதுகாறும் நம்பாமல், தான் உண்மையில் கல்யாணியம்மாளது மகன் என்றே அவன் உறுதியாக எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் கருப்பாயியின் வாக்குமூலத்தைக் கேட்ட உடனே அவனது மனதில் பெருத்த திகிலும், அளவு கடந்த அவமானமும், அபாரமான கவலையும் எழுந்துவிட்டன. அவள் சொல்லி இருந்த சகலமான விவரங்களும் பொருத்தமாகவும் திருத்த மாகவும் தோன்றின. தனது மார்பிலிருந்த மச்சம் முதற்கொண்டு சகலமான விவரங்களையும் அவள் அறிந்து வெளியிட்டதில் இருந்து அவள் சொன்ன ஒவ்வொ ரக்ஷரமும் மெய் என்பது பிரத்தியகூடிமாகத் தெரிந்தது. தான் அம்பட்டச்சியின் மகன் தான் என்ற எண்ணம் அவனது மனதில் உறுதியாக எழுந்து வேரூன்றிப் போயிற்று. அதுகாறும் தான் பெருத்த சமஸ்தானாதிபதியின் புத்திரன் என்று அவன் தன்னைப்பற்றி மிகவும் பெருமையாக எண்ணிக் கொண்டிருந்த நினைவுகள் எல்லாம் பறந்து போயின. தனக்கும் அந்த சமஸ்தானத்துக்கும் இனி எவ்விதச் சம்பந்தமும் இல்லாமல் போகுமானால், தான் ஒட்டாண்டியாகப் பிச்சை எடுக்க நேருமே என்றும், தன்னை அம்பட்டச்சி மகன் என்று உலகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/171&oldid=853306" இலிருந்து மீள்விக்கப்பட்டது