பக்கம்:மதன கல்யாணி-3.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


168 மதன கல்யாணி இகழ்ந்து விலக்குவார்களே என்றும் நினைத்த மிகவும் கலங்கினான்; அவனது மூளை குழம்பியது. அறிவு மழுங்கியது. கண்கள் இருண்டன; ஜட்ஜி அவனது மச்சத்தைச் சோதனை செய்வதற்காக அழைத்த போது, அவனது பக்கத்தில் நின்ற போலீ சார் அவனை இழுத்துக் கொண்டு போய்த் திரும்பி இழுத்து வந்து நிறுத்தும்படியான மகா கேவலமான நிலைமையை அடைந்து துவண்டு தள்ளாடிச் சோர்ந்து கூண்டின் மேல் சாய்ந்து விட்டான். பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டு சாட்சிக் கூண்டின் மேல் நின்று கொண்டிருந்தார். மைனரது மச்சத்தைப் பார்த்த பிறகு ஜட்ஜி பாரிஸ்டர் குரோட்டன் துரையை நோக்கி, "ஏதாவது கேள்விகள் உண்டா?" என்றார். அதைக் கேட்டு எழுந்து நின்ற பாரிஸ்டர் குரோட்டன் துரை ஜட்ஜியை நோக்கி, "இந்த வழக்கோ மைனர் ஒரு கிழவியைக் கொலை செய்து விட்டதாகக் கொண்டுவரப் பட்டிருக்கிறது; இப்போது படிக்கப்பட்ட மரணாந்த வாக்குமூலத்தில், அந்தக் கிழவியால் இந்த வழக்குக்கு சம்பந்தப்படாத குடும்ப விவகாரங் களும், சிவில் சம்பந்தமான விஷயங்களும் சொல்லப்பட்டிருக் கின்றன. இந்த மைனர் உண்மையான மைனர்தானா என்ற கேள்வியைப் பற்றி விரிவாக இப்போது விசாரித்துக் கொண்டு போவதற்கு இந்தக் கோர்ட்டாருக்கு எவ்வித அதிகாரமும் இருப்ப தாகத் தோன்றவில்லை. இப்போதைய வழக்குக்கும் அதற்கும் எவ்விதச் சம்பந்தமிருப்பதாகவும் தோன்றவில்லை; போலீசார் கொலைக் குற்றத்தை ருஜூப்படுத்துவதை விட்டு, மாரமங்கலம் ஜெமீந்தாரியின் நிஜமான வார்சுதார் யார் என்பதை நிஷ்கரிக்க எத்தனிப்பதாகத் தோன்றியது; இந்த மைனரின் போஷகர்கள் என்னை நியமித்தது இந்தக் கொலை சம்பந்தமாக வாதிக்கும்படியே யன்றி வேறே சிவில் பாத்தியதைகளைப் பற்றியல்ல. அந்த விஷயத்தில் எனக்குத் தேவையான தகவல்கள் ஒன்றும் கிடைக்க வில்லை ஆகையால், குருடனைப் போல, இருட்டில் தடவ என் மனம் இடந்தரவில்லை. வார்சு பாத்தியத்தைப் பற்றி வாதிக்க வேண்டாம் என்று இந்த மைனருடைய போஷகர்கள் எனக்குத் தெரிவிக்கிறபடியால், நான் அந்த விஷயத்தில் வாதாடத் தயாராக