பக்கம்:மதன கல்யாணி-3.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 171 பலிதமாகாமல் போயிற்று. ஆகையால், விசாரணை தினத்தன்று தனது கதி எப்படி முடியுமோ என்பதைப் பற்றி அளவு கடந்த சஞ்சலமும், கவலையும் ஏக்கமும் அடைந்து அதே தியானமாகக் கிடந்து அந்தச் சீமாட்டி சோர்ந்து கலங்கி மிகவும் பரிதாபகரமான நிலைமையில் இருந்தாள். விசாரணை தினத்தன்று, தானும் ஹைகோர்ட்டுக்குள் வந்தால் அவ்விடத்தில் அசங்கியமான விஷயங்கள் ஏதேனும் வெளிப்படுவதைக் கேட்டு, ஜனங்கள் தன்னைப் புரளி செய்வார்கள் என்று நினைத்து அங்கே வராமல், ஹைகோர்டடிற்கு அண்டையில் ஆரம்பமாகும் தம்புச்செட்டித் தெருவில் இரண்டாவது மெத்தை வீடு காலியாக இருந்ததை உணர்ந்து அதற்கு ஒருமாத வாடகை கொடுத்து, அதை சுவாதீனப் படுத்திக் கொண்டு அங்கே வந்து இருந்து கொண்டாள். கச்சேரியில் நடக்கப் போகும் விசாரணையின் விவரங்களை எல்லாம் தான் உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தனக்கு அவமானம் வரக்கூடிய முக்கியமான விஷயம் வெளியாகிவிடு மானால், தான் அவ்விடத்திலேயே தனது பிரானனை விட்டு விடுவதென்றும் தீர்மானித்துக் கொண்டாள்; சுருக்கெழுத்துப் பரீட்சையில் (Short hand) தேறிய இரண்டு குமாஸ்தாக்களையும், பல ஆட்களையும் தயாராக வைத்துக் கொண்டாள். சுருக்கெழுத்து குமாஸ்தாக்களில் ஒருவன் விசாரணை நடக்கும் ஹாலிலிருந்து, அங்கே பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு சாட்சியினது வாக்குமூலத்தையும் தனித்தனி காகிதங்களில் எழுதுவதென்றும், அவனுக்குப் பக்கத்தில் ஆட்களிருந்து உடனுக்குடன் அந்தக் காகிதங்களை வாங்கிக் கொண்டு போய், வழிநெடுக அஞ்சலாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்கள் மூலமாக அனுப்பி இரண்டாவது நம்பர் வீட்டிலிருந்த கல்யாணியம்மா ளிடத்தில் சேர்ப்பதென்றும், அங்கே மேன்மாடத்தின் ஒர் அறையில் அவளும், அவளுக்கெதிரில் இன்னொரு சுருக்கெழுத்து குமாஸ்தாவும் இருப்பதென்றும் காகிதங்கள் வரவர உடனுக்குடன் அந்த குமாஸ்தா படித்து அவளுக்கு மொழி பெயர்த்துச் சொல்வ தென்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மைனர் தனது மகன் என்ற விஷயத்தை அம்பட்டக் கருப்பாயி வெளியிடுவாள் என்ற ஒரு சந்தேகம் கல்யாணியம்மாளினது மனதில் இருந்தது. ஆனால்,