172 மதன கல்யாணி
அவள் சாதாரணமாக அதை வெளியிட்டால் அதை எவரும் நம்பாமல் அவளை ஒரு பைத்தியக்காரி என்று மதிப்பார்கள் என்ற எண்ணமும் அந்தச் சீமாட்டிக்கு உண்டாயிற்று. ஆனால், அந்த ரகசியம் நன்றாக ருஜூவாகிப் போம்படி அவள் எல்லா விவரங் களையும் எடுத்துச் சொல்ல மாட்டாள் என்ற ஒரு நம்பிககை மாத்திரம் கல்யாணியம்மாளுக்கு இருந்தது. அவள் அத்தனை வருஷ காலத்திற்குள் தன்னிடத்தில் கணக்கின்றி பணத்தை ஆயிரம் ஆயிரமாக அபகரித்துப் போனவளாதலால், அவள் அந்த விசுவா சத்தை மறந்து, தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற உறுதி இருந்து வந்தது; தனது மகன் மீது அவளுக்கு ஆத்திரமிருந் தாலும், அவள் அதைத் தன்மீது காட்ட, அவளுக்கும் தனக்கும் எவ்விதப் பகைமையுமில்லை ஆகையால், கருப்பாயி தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற மனோதிடம் மாத்திரம் அந்தச் சீமாட்டியின் மனதில் இருந்தது. ஆகையால் அவள் மாறி மாறி நம்பிக்கையும், அவநம்பிக்கையும் கொண்டவளாய், மேலே குறிக்கப்பட்ட ஏற்பாடுகளுடன் விசாரணை தினத்தனறு இரண்டாவது இலக்கமுள்ள வீட்டில் இருந்தாள். அந்த வீட்டின் அடிக்கட்டு ஏராளமான பஞ்சுப்பொதிகள் நிறைந்த பஞ்சுக் கிடங்காக இருந்ததன்றி, அந்த வீட்டின் நடைக்கடுத்த இரண்டாவது கதவு மூடிப் பூட்டப்பட்டிருந்தது. நைைடயிலிருந்து மேலே சென்ற படிக்கட்டுகளின் வழியாகவே அந்த வீட்டின் மேன் மாடத்திற்குப் போக வேண்டும். அந்த மேன்மாடத்தை மாத்திரம் கல்யாணியம்மாள் வாடகைக்கு வாங்கிக் கொண்டு அதற்குள் இருந்தாள். அந்த இரண்டாவது உப்பரிகைக்கு மேல், கைப்பிடிச் சுவருள்ள மொட்டை மெத்தை இருந்தது. அந்த மொட்டை மெத்தைக்குப் போக, கல்யாணியம்மாள் இருந்த உப்பரிகையில் இருந்து படிக்கட்டுகள் இருந்தன. அந்த விசாரணையில் மைனர் அம்பட்டச்சியின் மகன் என்பது ருஜூவாகிவிடு மானால், தான் உடனே அந்தச் சுருக்கெழுத்து குமாஸ்தாவை ஏதாவது ஒர் அலுவலின் மேல் வெளியில் அனுப்பிவிட்டுத் தான் மாத்திரம் மூனறாவது அநதஸ்தாகிய மொட்டை மெத்தைக்குப் போய் அங்கே பின்புறத்திலிருந்த தோட்டத்தில் விழுந்து தனது உயிரைவிடடு விடுவதென்பது அந்தச் சீமாட்டியினது தீர்மானம்.
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/176
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
