பக்கம்:மதன கல்யாணி-3.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


174 மதன கல்யாணி யிற்று. தனது கட்சியின் பாரிஸ்டரது அபார சக்தியை மெச்சி, அவர் அந்த வழக்கில் தமது கட்சி வெற்றி பெறும்படி செய்தால், தாம் பேசிய தொகையைப் போல இரண்டத்தனை தொகை தான அவருக்குக் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் செய்து கொண்டாள். குரோட்டன் துரையின் குறுக்கு விசாரணையில் மதனகோபாலனது வாக்குமூலம் முக்கியமான இடங்களில் உபயோகமற்றுப் போனதாலும், மதனகோபாலன், அவன் மீது அவதூறு சொல்லி அவனது அலுவலை இழக்கச் செய்தவளான தனது பெயரை வெளியிடாமல் மறைத்ததைக் காண, அவளது மனதில் மதனகோபாலன் விஷயத்தில் ஏற்பட்ட நன்றியறிதல் வாத்சல்யம் முதலியவற்றின் பெருக்கு அளவற்றதாக இருந்தது. பிள்ளையிருந்தாலும் அப்படிப்பட்ட உத்தம குண்ங்கள் நிறைந்த பிள்ளை இருக்க வேண்டும் என்றும், சகலமான இழிகுணங்களும் நிறைந்த கேவலம் துஷ்டனான மைனரைத் தனது பிள்ளை என்று சொல்லத் தனக்கு விதி ஏற்பட்டிருந்ததே என்றும், அந்தச் சீமாட்டி நினைத்து வருந்தி உருகியிருந்த சமயத்தில் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரினது வாக்குமூலமும், வேலைக்காரர்கள், போலீஸ் ஜெவான் முதலியோர்களினது வாக்குமூலங்களும், சர்ஜன் துரையின் வாக்குமூலமும் பாரிஸ்டர் குரோட்டன் செய்த குறுக்கு விசாரணையின் விவரங்களும் வரவர எப்படியும் தனது பாரிஸ்டர் மைனரைக் கொலைக் குற்றத்திலிருந்து தப்ப வைத்துவிடுவார் என்ற உறுதியும் நம்பிக்கையும் எழுந்து கல்யாணியம்மாளது மனதில் மேலாடிக் கொண்டிருந்தன. அதற்கு அடுத்தாற் போல பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டு கருப்பாயியின் வாக்குமூலத்தை வாசிக்கப் போகிறார் என்ற செய்தி கிடைத்தது. அப்போது தான் கல்யாணியம்மாளினது தேகம் கட்டிலடங்காமல் பதறியது; மனதில் பலவகையான உணர்ச்சிகள் கொந்தளித் தெழுந்து அவளது மார்பையே படீரென்று கிழித்தெறிந்து விடுமோ எனத் தோன்றின. அதற்கு மேல் என்ன விபரீதம் நேருமோ, அந்தக் கிழவி தனது மரணாவஸ்தையில் என்னென்ன விவரங்களை வெளியிட்டிருப்பாளோ என்ற கவலைகள் மகா உக்கிரமாகப் பெருகி அவளது உணர்வையும் அறிவையும் கலக்கிச் சின்னா பின்னமாக்கிக் கொண்டிருந்தன. அவள் தனது ஆசனத்தில்