பக்கம்:மதன கல்யாணி-3.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 175 உட்கார்ந்திருக்க மாட்டால் எழுந்து நெடுமூச்செறிந்தவளாகத் தானிருந்த விடுதியில் உலாவத் தொடங்கினாள். கொஞ்ச நேரத்தில் கருப்பாயியின் மரணாந்த வாக்குமூலத்தினது விவரம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது; தான் அம்பட்டச்சியின் மகனை வாங்கி வளர்த்த விவரங்களை எல்லாம், அன்னிய மனிதனான அந்தச் சுருக்கெழுத்து குமாஸ்தா படித்து விவரித்துச் சொன்னதைக் கேட்க, அவளது எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றியது. அவனது வாய்மூலமாக அந்த விஷயங்களை அறிந்து கொள்வதும் அத்யாவசியமாக இருந்தது. அவன் அந்த விஷயங்களை வாயில் வைத்துப் பேசியதைக் கேட்பதும் கன்னகடுரமாகவும் வெட்கக் கேடாகவும் இருந்தது. இருந்தாலும் கருப்பாயி தனது ரகசியங்களை எல்லாம் ஒன்றுகூட விடாமல் வெளிப்படுத்தி விட்டாள் என்பதை உணர உணர, அவளது நினைவு முழுதும் கலவரப்பட்டுப் போய் விட்டது. பெருத்த பிரமிப்பும் திகிலும் ஏற்பட்டுவிட்டன. எந்த ஒரு முக்கியமான ரகசியம் வெளிவரக்கூடாதென்று நினைத்து, அதற்குத் தகுந்தபடி அவள் ஆயத்தமாக இருந்தாளோ, அந்த விஷயம் பகிஷ்காரமாக வெளியாகி விட்டதைக் காண்வே, அந்தச் சீமாட்டி அப்படியே மயங்கி நாற்காலியில் உட்கார்ந்தபடி அரைக் 'கால் நாழிகை நேரம் வரையில் உணர்வற்றவளாக இருந்தாள். அவள் அயர்ந்து தூங்குகிறாள் என்று எண்ணிக் கொண்ட குமாஸ்தா மேலே வாசிக்காமல், அவளது முகத்தைப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அவளது மயக்கம் தெளிய, அவள் கண்களை விழித்துக் கொண்டவளாய் அவனை நோக்கி, "ஐயா! எனக்கு உடம்பு அசெளக்கியமாக இருக்கிறது, கிறுகிறுப்பும் மயக்கமும் வருகின்றன. தயவு செய்து நீர் கடைக்குப் போய் இரண்டு சோடாபுட்டிகள் வாங்கிக் கொண்டு வாரும்" என்று கூறி, மேஜையின் மீதிருந்த பணத்தில் ஒரு ரூபாயை எடுத்து, அவரிடத்தில் போட அவர் அதை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டார். உடனே கல்யாணியம்மாள் தனது ஆசனத்தை விட்டெழுந்தாள்; தான் அம்பட்டச்சியின் மகனை வாங்கிப் பிள்ளையாக வளர்த்துப் பெருத்த மோசம் செய்தவள் என்பது உலகம் முழுதும் பரவி விட்டது போல அப்போதே அவளது மனதிற்குத் தோன்றவே, u.5.III–12