பக்கம்:மதன கல்யாணி-3.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 மதன கல்யாணி அது ஒரு கந்தருவலோகம் போல விளங்கியது. அப்படிப்பட்ட மகா சிறப்பான மாளிகையின் முன்பக்கத்திலிருந்த ஒரு பெருத்த மகாலில் மதனகோபாலன் ஒரு பஞ்சணையின் மேல் சாய்ந்து கொண்டிருந்தான். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் ஒரு சோபாவில் உல்லாசமாகச் சாய்ந்திருந்த வண்ணம் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு மதனகோபாலனிடத்தில் சம்பாவித்துக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் மோகனாங்கி உட்கார்ந் திருக்க, தாதிகள் அவளுக்குக் குழல் வனைந்து கொண்டிருந்தனர். அந்த மகா உன்னதமான பங்களாவானது, மைலாப்பூரில் கடற்கரையை அடுத்துச் செல்லும் ராஜபாட்டையின் மீது கடற்கரைப் பக்கம் பார்த்ததாக அமைந்திருந்தது. ஆகவே அந்த பங்களாவிற்குள்ளிருந்த மகால்களில் மனிதர் உட்கார்ந்திருந்தால், கடலின் பரப்பும் ஆகாயத்தின் பிரிவும் நெடுந்துரம் வரையில் தெரிவதனறி, கடலிலிருந்தெழும் மந்தமாருதமும் அந்த பங்களா விற்குள் நுழைந்து சதாகாலமும் ஜிலுஜிலென்று வீசி அதற்குள் இருப்போரை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும். அந்த பங்களாவின் முன்புறத்திலிருந்த ராஜபாட்டையின் மேல், கண்கண்ட தூரம் வரையில் பங்களாக்களும் பெருத்த பெருத்த கட்டிடங்களும், மின்சார விளக்குக் கம்பங்களும், கம்பிகளும், பூத் தொட்டிகளின் பந்திகளும், பூச்செடிகளின் பாத்திகளும், வெள்ளை வெளேரெனக் காணப்பட்ட மணலின் பரப்பும் ஒன்று கூடி அந்த இடம் கந்தருவர் முதலியோர் வசிக்கும் வானுலகமோ என்ற ஐயத்தை உண்டாக்கின. அப்படிப்பட்ட மகா ரமணியமான ஸ்தலத்தில், ஒப்புயர்வற்ற மகா சிங்காரமான அந்த மாளிகையிலிருந்த மதனகோபாலன், மோகனாங்கி, கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் ஆகிய மூவரும் அன்றைய பகல் முழுதும் நிரம்பவும் குதுகலமாக இருந்தனர். மாலை நான்கு மணி சமயத்தில் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் தாம் வெளியில் போய்விட்டு ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி வருவதாக மதனகோபாலனிடத்தில் கூறிவிட்டு, அவனுக்கு விருப்பமானால், கடற்கரைக்குப் போய் சிறிது நேரமிருந்து வரலாம் என்று அனுமதி கொடுத்துவிட்டு வெளியிலே சென்றார்.