பக்கம்:மதன கல்யாணி-3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மதன கல்யாணி எந்த மனிதரது முகத்திலும் விழிப்பதற்கு அவளது மனம் இடந்தர வில்லை. தான் முன்னரே செய்து கொண்டிருந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தவிர உய்யும் வகை வேறேயில்லை என்பதை உணர்ந்துகொண்ட அந்தச் சீமாட்டி விரைவாகச் சென்று அந்த மெத்தையிலிருந்து கீழே இறங்கும் படிகளின் மேலே இருந்த கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டவளாய விசையாக நடந்து, மூன்றாவது அந்தஸ்தாகிய மொட்டை மெத்தை யின் படிகளில் தடதடவென்றேறி மேலே சென்றாள். அந்த சமயத்தில் கல்யாணியம்மாள் தனது உயிரையே ஒரு திரணமாக மதித்துத் தனது மனதிற்கு மிகுந்த திடத்தை ஊட்டிக் கொண்ட வளாய், "ஐயோ! தெய்வமே! என்னுடைய குடும்பம் இப்படியா சீர்குலைந்து, ஊரார் பழித்துச் சிரிக்கும்படியான ஏளனத்துக்கு ஆளாகி அநியாயமாக அழிந்து போக வேண்டும்! சே! என்ன உலகம்! என்ன சொந்தக்காரர்! என்ன பிள்ளை! என்ன பெண்! மனிதன் நல்ல வழியில் போனாலும் துன்பம் வருகிறது; கெட்ட வழியில் போனாலும் துன்பம் வருகிறது; எவ்வளவோ அபாரமான செல்வத்தையும் செல்வாக்கையும் பிள்ளைக் குட்டிகளையும வைத்திருந்தும், ஈசுவரனுக்குப் பயந்து ஒழுங்கான வழியில் நடந்தும், நான் என்ன சுகத்தைக் கண்டேன்! ஒன்றுமில்லை. ஒவ்வொன்றினாலும் மலைமலையான அபாயங்களும் துன்பங் களுமே வந்து நேர்ந்தனவன்றி, நிம்மதியாக அப்பாடா என்று கவலையின்றி நான் படுத்தறியேன்! அப்பப்பா! உலகம் பொல்லாது! முக்காலும் பொல்லாது! நரகமென்று சொல்வதற்கு இனி வேறே இடமே இல்லை ஒரு நிமிஷ நேரமாவது இந்தப் பாழும் உலகத்தில் இருக்கப்படாதப்பா! மற்ற எல்லோரும் கெட்டுப் போனாலும், என்னுடைய செல்வக்குழந்தையான கோமளவல்லி ஒருத்தி தான் கடைசி வரையில் தாய்க்கடங்கி ஒழுங்கான நடத்தையோடிருந்தவள். அவள் உறுதியான மனசுடையவள் ஆகையால், அவள் இனியும் கெடவே மாட்டாள். மனிதரை மனிதர் எவ்வளவு துரந்தான் தாங்கிவிட முடியும். அவரவர்கள் தம்தம் புத்தியைக் கொண்டுதான் பிழைத்துப் போக வேண்டும். நான் இன்றைய தினம் வாந்தி பேதியால் திடீரென்று இறந்து போனால் கோமளவல்லி என்ன செய்வாள்? அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/180&oldid=853316" இலிருந்து மீள்விக்கப்பட்டது