பக்கம்:மதன கல்யாணி-3.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 177 பிழைக்க மாட்டாமல் செத்தா போய்விடப் போகிறாள்; யார் இருந்தாலும், யார் இறந்தாலும் உலகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது; மனிதர் வாழையடி வாழையாக வளர்ந்து பெருகி ஒருவரைவிட ஒருவர் அதிமேதாவியாகவும் சமர்த்தராகவும் இருந்து முன்னேற்ற மடைந்து அரும்பெருங் காரியங்களைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகையால், இந்தக் கோமளவல்லியைப் பற்றித் தான் நான் எதற்காகக் கவலைப்பட வேண்டும் அவரவர் தலை விதிப்படி தான் எதுவும் நடக்கும். எவ்வளவோ பந்தோபஸ்தாகக் காப்பாற்றப்பட்ட துரைஸாணியை ஒரு நொடியில் கொண்டுபோய் விட்டார்களே, நானிருந்து கோமளவல்லியைப் பாதுகாக்க முடிய வில்லையே என்று கவலைப்படுவதில் என்ன உபயோகம்! எவருக்கும் தன் தன் பலமே பலம். ஈசுவரா! இவ்வளவு காலந் தான் நான் இந்த உலகத்தில் இருக்க வரம் வாங்கி வந்தேன். இங்கே இருந்து நான் அனுபவித்த சுகம் போதும்; இனியாகிலும் என்னை உன் பொன்னடியில் சேர்த்துக்கொள்' என்று பலவாறு நினைத்த வண்ணம் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தோடிக் கைப்பிடிச்சுவரிலேறி அந்த வீட்டின் பின்புறத் தோட்டத்திற்குள் குப்புற வீழ்ந்து விட்டாள். ★ ★ Yk அந்தச் சீமாட்டியினது நிலைமை அப்படி இருக்க, ஹைகோர்ட் டில் விசாரன்ன நடந்து கொண்டே போனது. சைதாப்பேட்டை டாக்டர் சாட்சிக் கூண்டின் மேல் வந்து நிற்க, சர்க்கார் வக்கீல், அவரது வாய்மூலமாக அடியில் கண்ட விஷயங்களை வரவழைத் தார்: என் பெயர் டாக்டர் கேசவலு நாயுடு! நான் இங்கிலீஷ் முறைப் படி வைத்தியப் பரீட்சையில் தேறி சைதாப்பேட்டையில் வாசமாக இருந்து சென்ற 30-வருவடி காலமாக வைத்தியம் செய்து வருகிறேன். என்னுடைய பரீட்சை முடிந்த பிறகு நான் ஐரோப் பாவில் பிரான்ஸ் தேசத்தின் தலைமை நகரமாகிய பாரிஸ் தேசத்துக்குப் போய், மனிதருடைய உடம்பின் மேல்தோல்