பக்கம்:மதன கல்யாணி-3.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 479 கடைசி முறையாகப் பார்த்தது; அதன் பிறகு அவள் எங்கே இருந்தாள் என்பதும் என்ன தொழில் செய்தாள் என்பதும் எனக்குத் தெரியாது. அந்த அம்பட்டக் கருப்பாயியின் மகனுடைய முகச்சாயல் போலத்தான் இவருடைய முகமும் தோன்றுகிறது; ஆனால் அந்தப் பையன் தான் இவர் என்பதை நான் நிச்சயமாகச் சொல்ல முடியாது - என்றார். . உடனே சர்க்கார் வக்கீல் கேசவலு நாயுடுவைக் கீழே இறங்கிப் போய் மைனரது மார்பிலிருந்த வடுவைப் பார்த்துவிட்டு வரும்படி சொல்ல, அவர் அப்படி போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து சாட்சிக் கூண்டின்மேல் நின்ற வண்ணம் மேலும் வாக்குமூலம் கொடுக்கலானார்:- இந்த மனிதருடைய மார்பிலிருக்கும் வடுவை நான் இப்போது பார்த்தேன். நான் கருப்பாயியின் மகனுடைய மார்பில் சுட்டதனால் உண்டான வடுவைப் போலத்தான் இந்த வடு இருக்கிறது. இவருடைய தேக அமைப்பும், முகச்சாயலையும், இந்த வடுவிருப்பதையும் கவனிக்க, அந்தப் பையனே வளர்ந்து இந்த ரூபத்துக்கு வந்திருக்க வேண்டும் என்றே எண்ண் வேண்டி இருக்கிறது. அந்தப் பையனே இவர் என்பதை அநேகமாய் நிச்சய மாகச் சொல்லலாம் என்று டாக்டர் கேசவலு நாயுடு வாக்குமூலம் கொடுத்து முடித்தார். அவர் சொன்ன வரலாற்றைக் கேட்க, கருப்பாயியினது வாக்குமூலத்திலிருந்த விவரங்கள் எல்லாம் நிஜமானவை என்பது எல்லோர் மனதிலும் உறுதியாகிவிட்டது. கருப்பாயியின் மரணந்த வாக்குமூலம் கேவலம் பிறற்றலென்று ரு.ஜூப்படுத்திய பாரிஸ்டர் குரோட்டன் துரை பட்ட பாடெல்லாம் வீணாயிற்று என்று ஜனங்கள் தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டனர். . உடனே ஜட்ஜி சர்க்கார் வக்கீலை நோக்கி, "மகா படிப்பாளியான நமது நண்பர் பாரிஸ்டர் குரோட்டன் துரை, குறுக்கு விசாரணை களை எல்லாம் கடைசியில் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்வதால், இன்னம் மிகுதி இருக்கும் சாட்சியையும் விசாரித்து விடலாம். அடுத்த சாட்சியை அழைப்போம்" என்றார். உடனே சேவகன்; 'மைசூர் சின்னையா நாயுடு: மைசூர் சின்னையா நாயுடு மைசூர் சின்னையாநாயுடு என்று மூன்று தரம்