பக்கம்:மதன கல்யாணி-3.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


180 மதன கல்யாணி கூப்பிட்டான். அடுத்த நிமிஷத்தில் சின்னையா நாயுடு என்பவர் உள்ளே வந்து சாட்சிக் கூண்டின் மேல் ஏறி நின்றார். அவர் தக்க பெரிய மனிதர் போல, உயர்வான ஆடைகளை அணிந்திருந்ததன்றி, தோற்றத்திலும் உண்மையான பெரிய பிரபுவைப் போலவே இருந்தார். அவர் அவ்வாறு வந்ததைக் கண்ட யாவரும், மைசூரில் உள்ள அந்த மனிதர் சென்னையில் நடந்த கொலை விஷயமாக என்ன சங்கதியைச் சொல்லப் போகிறார் என்ற வியப்பும் சந்தேகமு மடைந்தனர். விசாரணை மண்டபத்தின் ஒரு புறத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் சின்னைய்யா நாயுடு வந்ததைக் கண்டு திடுக்கிட்டு, மிகவும் ஆச்சரியமுற்று, தன்னிடத் தில் மதனகோபாலனையும் மோகனாங்கியையும் ஒப்படைத்த மனிதர் அந்த சின்னையா நாயுடு என்பதைப் போலீசார் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்றும், அவரை அப்போது எதற்காக சாட்சியாக வரவழைத்திருக்கிறார்கள் என்றும் சந்தேகித்து பிரமித்து அப்படியே உட்கார்ந்திருந்தார். அவரது தேகம் என்ன காரணத்தினாலோ படபடவென்று துடித்தது. உள்ளம் பூரித்துப் பொங்கி எழுந்தது; இன்னதென்று சொல்லவியலாத பல வேதனை களால் பெரிதும் சஞ்சலமுற்றவராக அவர் உட்கார்ந்திருந்தார். சாட்சிக் கூண்டின்மேல் ஏறி நின்ற சின்னையா நாயுடு பிரமாணம் செய்விக்கப்பட, அவரது வாய்மூலமாக சர்க்கார் வக்கீல் அடியில் கண்ட விஷயங்களை வருவித்தார்: என் பெயர் சின்னையா நாயுடு. நான் மைசூரில் ஸ்திரமாக வாசம் செய்து வருகிறேன். எனக்கு மைசூரில் ஒரு பெரிய பங்களாவும், மூன்று மெத்தை வீடுகளும், 20-காணி நஞ்சை நிலமும் இருக்கின் றன. என்னுடைய ஆஸ்திகள் எல்லாம் ஒருசுமார் 5-லட்சம் ரூபாய் பெறும்; நான் சர்க்காருக்கு நிலவரி வருமானவரி எல்லாம் சேர்த்து வருஷத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிஸ்தி செலுத்துகிறேன். அதுவும் தவிர, நான் இப்போது தாலுகா போர்டிலும், ஜில்லா போர்டிலும் மெம்பராக இருந்து வருகிறேன்; என்னுடைய ஆஸ்தி முழுதையும் நானே சுயமாகச் சம்பாதித்தேன். இந்த சென்னை ராஜதானி மைசூர் ராஜ்ஜியம் ஆகிய இரண்டிலும் முக்கியமான பட்டணங்களில் எல்லாம் என்னுடைய கம்பெனியார் நாடகம் ஆடியிருக்கிறார்கள். அந்தக் கம்பெனியை வைத்து நான் ஒரு