பக்கம்:மதன கல்யாணி-3.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 மதன கல்யாணி பிடில் வித்துவானுடைய சொந்தவூர் தஞ்சை ஜில்லாவில் உள்ள திருக்கோடிகாவல். அவருக்கு நான் மாதம் ஒன்றுக்கு 100-ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தேன். அவர் இறந்து போவதற்குப் பத்து வருஷ காலத்துக்கு முன்னே தொடங்கி என்னுடைய கம்பெனியில் அவர் வேலையில் இருந்து வந்தார். அவர் வேலையில் அமர்ந்த காலத்தில் கலியாணமாகாத பிரம்மசாரியாக இருந்தார். என்னிடத்தில் வந்து மூன்று வருஷம் பணம் சேர்த்து ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டார். எங்களுடைய கம்பெனி எந்த ஊருக்குப் போனாலும் அவர் அங்கே குடும்ப சமேதராகவே வருவார். ஏனென்றால், அவருடைய சம்சாரத்துக்கும் எவ்வித உறவினரும் உயிரோடில்லை. ஆகையால் அவர் தம்முடைய சம்சாரத்தையும் தம்மோடு கூடவே அழைத்து வந்தார். கொஞ்ச காலத்துக்குப பிறகு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஆறுமாத காலத்தில் அவருடைய சம்சாரம் விஷ பேதியினால் இறந்து போய்விட்டாள். அவர் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகவும், தமக்க ஆகாரம் சமைத்துப் போடு வதற்காகவும் ஒரு வேலைக்காரியை ஏற்படுத்தி அந்தக் குழந்தையை வளர்த்து வந்தார். அந்தக் குழந்தைக்கு ஒரு வயசான போது நாங்கள் தஞ்சாவூரில் நாடகம் ஆடிக் கொண்டிருந்தோம். அந்த ஊருக்கு ஆறு மயில் தூரத்துக்கு வடக்கில் திருவையாறு என்ற ஒரு மகா கூேடித்திரமிருக்கிறது. அந்த ஊரினிடையில் காவிரி யாறு போகிறது. அந்த ஊரில் உள்ள சிவஸ்தலத்துக்கு ஜனங்கள் தினந்தினம் ஏராளமாகப் போவது வழக்கம். தென் தேசத்தின் சங்கீத நிபுணரும் சங்கீத கர்த்தாவுமான பிரம்மபூரீ தியாகராஜ சுவாமிகள் வசிக்கும் பாக்கியத்தைப் பெற்ற அந்த ஊரில் அவரது காலம் முதல் பாடகர்களும், வீணை வித்துவான்களும் ஏராளமாகப் பிறந்து கீர்த்தி பெற்றிருந்து வருவதை அறிந்த எங்களுடைய பிடில் வித்துவான், அந்த ஊரில் உள்ள ஒரு பிரபல சங்கீத வித்துவானிடம் அடிக்கடி போயிருந்து விட்டு வருவதுண்டு. அப்படி அவர் போய் விட்டு ஒருநாள் திரும்பி வருகையில், ஒரு முரட்டு மனிதன் மூன்று வயசுள்ள அழகான ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு வந்ததைக் கண்டு சந்தேகங் கொண்டு அவனுடைய வரலாற்றை விசாரிக்க, அவன் தானிருப்பது பக்கத்தில் உள்ள மாரமங்கலம்