பக்கம்:மதன கல்யாணி-3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் f53 என்றும், தான் வழியோடு வரும் போது அந்தக் குழந்தை வழியில் அழுது கொண்டிருந்ததைக் கண்டு எடுத்துப் போவதாகவும், யாராவது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதைக் கொடுத்துவிடுவதா கவும் சொன்னான். அவர் அந்தக் குழந்தையின் ஆசை கொண்டு, அவனை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்தார்; அவரது கைவசத்தில் அப்போது எண்ணுறு ரூபாய் இருந்தது; என்னிடத்தில் இன்னோர் இருநூறு ரூபாய் கடனாக வாங்கி அவனுக்குக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டார். அவருடைய விலாசத்தை எழுதிக் கொடுக்குமபடி அந்த முரட்டாள் கேட்க, பிடில் வித்வான் ஒரு துண்டுக் காகிதத்தில எழுதிக் கொடுத்து அவனை அனுப்பி விட்டார். அந்தக் குழந்தையை நான் வாங்கிப் பார்த்து அதன் அபரிமிதமான அழகைக் கண்டு அது ராஜவம்சத்தைச் சேர்நத குழந்தை என்று அனுமானித்துக் கொண்டேன். அதன் மார்பில் மாம்பிஞ்சு போல ஒரு மச்சமிருக்கக் கண்டேன். அந்தக் குழந்தை தான் மதனகோபாலன். அவனுடைய உடம்பில் அந்த மச்சம் இன்னமும் இருக்கிறது. அந்த பிடில்வித்துவான் அந்தக் குழந்தையை மிகவும் அன்பாக வளர்த்து வந்தார். கேட்போர் களுக்கு அது விலைக்கு வாங்கப்பட்ட குழந்தை என்று சொல்ல அவருக்கு இஷ்டமில்லை. ஆகையால் அவர் அதனை சொந்த பிள்ளை என்றே சொல்லி வளர்த்து வந்தார். கம்பெனியில் உள்ளோர் யாவரும், நானும்கூட அப்படியே சொல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் எல்லோரும் அப்படியே சொல்லி வந்தோம். பையனும், பெண்ணும் சொந்த அண்ணன் தங்கையென்றே நினைத்துக் கொண்டு வளர்ந்து வந்தனர். பிடில் வித்துவான் இறந்த பின், நான் அவர்களைக் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரிடத்தில் ஒப்புவித்த காலத்தில், அவர் அவர்களுடைய வரலாற்றைப் பற்றி விரிவாகக் கேட்கவில்லை குழந்தைகள் அநாதைகள் என்ற உடனே அவர் அவ்வளவோடு திருப்தியடைந்து வாங்கிக் கொண்டார். பையனுடைய வரலாற்றைச் சொல்வது அநாவசியம் எனறும், அப்படிச் சொன்னால், பையன் மேல் அவருக்கு மதிப்புக்குறைவும் அன்புக் குறைவும் ஏற்பட்டு விடுமோ என்று நினைத்து, நான் அந்த ரகசியத்தை அவரிடம் சொல்லவில்லை. அவா அவர்கள் சொந்த அண்ணன் தங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/186&oldid=853323" இலிருந்து மீள்விக்கப்பட்டது