வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185
மறுபடியும் கூப்பிடும்படி உத்தரவு செய்ய, அவர்கள் இருவரும் திரும்பவும் உள்ளே வருவிக்கப்பட்டனர். சர்ஜன் துரை சாட்சிக் கூணடில் நிற்க வைக்கப்பட்டு மறுபடியும் பிரமாணம் செய்விக்கப் பட்டார்.
மதனகோபாலனை ஜட்ஜி தமக்கருகில் வரவழைத்து அவனது மார்பிலிருந்த மச்சத்தை உற்றுப் பார்த்தபின், சாட்சிக் கூண்டில் நின்ற சர்ஜன் துரைக்கெதிரில் அவனை நிற்கச் செய்து, "ஐயா! சர்ஜனன் துரையவர்களே! உங்களுக்கு முன்னால் நிற்கும் யெளவனப் புருஷனுடைய மார்பிலிருக்கும் மச்சத்தையும், கைதிக் கூண்டில் நிற்கும் சிறுவருடைய மார்பிலிருக்கும் மச்சத்தை யும் தயை செய்து ஒத்திட்டுப் பாருங்கள்" என்றனர். உடனே சர்ஜன் துரை மதனகோபாலனை அழைத்துக் கொண்டு மைனர் இருந்த இடத்திற்குப் போய் இருவரையும் பக்கம் பக்கமாக நிறுத்தி, இருவரது மச்சங்களையும் உற்று நோக்கி, தமது மடியிலிருந்த ஒரு பூதக்கண்ணாடியை எடுத்துக் கண்ணில் வைத்துப் பார்த்து அரை நாழிகை நேரம் வரையில் ஆராய்ச்சி செய்து, இரண்டையும் பென்சலால் அளந்து பார்த்தபின் திரும்பவும் சாட்சிக் கூண்டின் மேல் ஏறி நின்றவராய், "கோர்ட்டார் அவர்களுடைய உத்தரவுப்படி இரண்டு மச்சங்களையும் ஒத்திட்டு ஆராய்ந்து பார்த்தேன்; இரண்டும் ஒரே நீள அகலமுடையவனாக இருக்கின்றன. ஒருவனுடைய மார்பில் மச்சம் எந்த இடத்தில் இருக்கிறதோ அதே இடத்தில் மற்றவருடைய மார்பிலும் அது இருக்கிறது. இப்படி இருவருக்கும் பிறப்பிலேயே மச்சம் இருப்பது சந்தேகம். ஆகையால ஏதோ காரணத்தை முன்னிட்டு, ஒருவருடைய மச்சத்தைப் போல இன்னொருவருக்கு மனிதரால் செயற்கையாக உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும என்று நினைக்கிறேன்" என்றார்.
ஜட்ஜி:- யாருடையது இயற்கையானது, யாருடையது மனிதரால் உண்டாக்கப்பட்டது என்பது தெரிகிறதா?
சர்ஜன்:- தெரிகிறது. கைதிக்கூண்டில் இருப்பவருடைய மச்சம்
சுடப்பட்ட தழும்பு போல இருக்கிறது. மற்றவருடையது இயற்கை யாக உண்டான மச்சமாக இருக்கிறது - என்றார்.
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/188
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
