பக்கம்:மதன கல்யாணி-3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மதன கல்யாணி அவ்வளவோடு சர்ஜன் துரை வெளியில் அனுப்பப்பட்டார். மைசூர் சின்னையா நாயுடுவின் வாக்குமூலம் முடிந்தவுடனே அங்கிருந்த ஜட்ஜி வக்கீல்கள் மற்ற ஜனங்கள் ஆகிய எல்லோர் மனதிலும் கொஞ்ச நெஞ்சம் மிகுதியாயிருந்த சந்தேகங்கள் யாவும் தீர்ந்து போயின. கருப்பாயியின் வாக்குமூலத்தில் ஒர் அக்ஷரங் கூடத் தவறில்லை என்றும், மதனகோபாலனே உண்மையான மாரமங்கலம் மைனர் என்றும், மற்றவன் அம்பட்டக் கருப்பாயிக் கும் கொறவனுக்கும் பிறந்தவள் என்றும், தனது ரகசியத்தை அவள் வெளியிட்டு விடுவாள் என்கிற பயத்தினாலோ, அல்லது, தானும் பாலாம்பாளும் சேர்ந்து கருப்பாயியை அடித்துக் கட்டி சமுத்திரத்தில் போட்ட விஷயத்தை அவள் வெளியிட்டு விடுவாள் என்ற பயத்தினாலோ மைனர் அவளைக் கொன்றது உண்மை என்றும், சகலமான ஜனங்களும் அபிப்பிராயப்பட்டனர். உடனே ஜட்ஜி பாரிஸ்டர் குரோட்டன் துரையை நோக்கி, "சர்க்கார் பக்கத்து சாட்சிகளின் விசாரணை தீர்ந்து போய்விட்டது. தாங்கள் குற்றவாளிகளிடத்தில் கலந்து பேசி, அவர்கள் சொல்லும் சமாதானங்களைக் கேட்டுக் கொண்டு, குறுக்கு விசாரணை செய்யலாம். அதன் பொருட்டு தங்களுக்கு அவகாசம் வேண்டு மானால், இந்த விசாரணையை நாளைய தினம் வரையில் நிறுத்தி வைப்பதன்றி, தாங்கள் கைதிகளோடு பேசுவதற்கும் வசதி செய்து கொடுக்கிறோம். ஒருதலைச் சார்பாக விசாரணை நடத்தப்பட்ட தென்ற பழிக்கு ஆளாக நாங்கள் ஒருநாளும் இடந்தரமாட்டோம்" என்று அன்பாக்வும் மனப்பூர்வமாகவும் கூறினார். அந்தச் சமயத்தில் சிவஞான முதலியார் சடக்கென்று எழுந்து பாரிஸ்டர் குரோட்டன் துரையின் காதில் ரகசியமாக ஏதோ சில வார்த்தை களைச் சொல்ல, உடனே, பாரிஸ்டர் குரோட்டன் துரை எழுந்து நின்று சந்தோஷமாகப் புன்னகை செய்த முகத்தோடு ஜட்ஜிகளை நோக்கி, "வக்கீல்களும், பாரிஸ்டர்களும் கூலிக்காரர்களுக்குச் சமமானவர்கள் என்று சொல்வது அதிகமாகப் பொய்யாகாது. அவர்களை நியமிக்கிறவர்கள் என்ன வேலை செய்யச் சொல்லுகி றார்களோ அதைச் செய்ய அவர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள். அதற்கு மேல் அதிகமாகச் செய்ய அவர்களுக்கு எவ்வித அதிகாரமு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/189&oldid=853326" இலிருந்து மீள்விக்கப்பட்டது